வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வருக்கு மனைவியானார் ஐஸ்வர்யா ராஜேஷ்

By

ஐதராபாத்: வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்தில் நடிகை விஜய் தேவரகொண்டா மனைவியாக, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

தமிழில், அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, நம்ம வீட்டுப் பிள்ளை உட்பட பல படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தெலுங்கில் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற படத்தில் நடித்திருந்தார். இது தமிழில் வெளியான கனா படத்தின் ரீமேக்.

Aishwarya Rajesh as Vijay Devarakondas wife in World Famous Lover

இதையடுத்து சலீம் இயக்குனர் நிர்மல்குமாரின் மிஸ் மேட்ச் படத்தில் நடித்தார். இந்தப் படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. இதையடுத்து டக் ஜகதிஷ் (Tuck Jagadish) என்று படத்தில் நானியுடன் நடிக்க இருக்கிறார்.

இதற்கிடையே, வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் 'அர்ஜுன் ரெட்டி' விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கிறார். சீனய்யா என்ற லவ்வர் பாய் கேரக்டரில் நடிக்கும் அவருக்கு மனைவியாக, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

இதில் ராஷிகண்ணா, கேத்தரின் தெரசா, இஷபெல் ஆகிய ஹீரோயின்களும் நடிக்கின்றனர். கிராந்தி மாதவ் இயக்கும் இந்தப் படத்துக்கு கோபி சுந்தர் இசை அமைக்கிறார்.

இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா, ஐஸ்வர்யா ராஜேஷின் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதில் சுவர்ணா என்ற கேரக்டரில் ஐஸ்வர்யா நடிக்கிறார். இந்த போஸ்டருக்கு தெலுங்கு திரையுலகில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X