Aishwarya Rajesh: எத்தனை கல்யாணம் ஆச்சு? மேடையிலேயே ஜித்தன் ரமேஷை பார்த்துக் கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்!
சென்னை: ஃபர்ஹானா படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு பேசிய அந்த படத்தின் ஹீரோயின் ஐஸ்வர்யா ராஜேஷ் மேடையிலேயே நடிகர் ஜித்தன் ரமேஷுக்கு எத்தனை கல்யாணம் ஆச்சு என கேட்டது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இஸ்லாமியர்களை டார்கெட் செய்து தொடர்ந்து புர்கா, தி கேரளா ஸ்டோரி, ஃபர்ஹானா என வரிசையாக படங்கள் உருவாகி வருகின்றன.
இந்நிலையில், ஃபர்ஹானா படத்தில் இஸ்லாமியர்கள் பயப்படும் அளவுக்கு படம் இருக்காது என்றும் அவர்கள் கொண்டாடும் அளவுக்குத் தான் படம் இருக்கும் என தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் கூத்து படத்தை இயக்கியவர்: ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ், செல்வராகவன், ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகி உள்ள ஃபர்ஹானா படத்தை இயக்கியவர் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்.
ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் படங்களைத் தொடர்ந்து அவர் ஐஸ்வர்யா ராஜேஷை முதன்மை கதாபாத்திரமாக வைத்து இந்த படத்தை இயக்கி உள்ளார்.
மான்ஸ்டரில் ரியல் எலி: ஒரு நாள் கூத்து படத்தையே விவகாரமான கிளைமேக்ஸ் உடன் எடுத்து சர்ச்சையை கிளப்பிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் எஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான மான்ஸ்டர் படத்தில் ரியல் எலியை வைத்துத் தான் படத்தையே உருவாக்கினாராம். அந்த வீடு தான் செட் போடப்பட்டதாம். ஆனால், அதனை யாருமே நம்பவில்லை என தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு அந்த விழாவில் பேசினார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு: கடந்த 6 மாதங்களில் 6 படங்களுக்கு மேல் ரிலீஸ் செய்து விட்டு அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் ஃபர்ஹானா எனும் இஸ்லாமிய பெண்ணாக நடித்துள்ளார்.

டிரைவர் ஜமுனா, ரன் பேபி ரன், தி கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி என வரிசையாக படங்களை வெளியிட்டு வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஃபர்ஹானா திரைப்படம் நிச்சயம் பலருக்கும் பிடிக்கும் என பேசிய அவர், மேடையிலேயே ஜித்தன் ரமேஷை கலாய்த்து பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
ஜித்தன் ரமேஷுக்கு எத்தனை மனைவி?: ஜித்தன் ரமேஷ் மாதிரி ஒரு கணவர் கிடைக்க வேண்டும் என பெண்கள் எல்லாம் இந்த படத்தை பார்த்தால் ஏங்குவார்கள். அப்படியொரு கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார் எனக் கூறிவிட்டு, ஜித்தன் ரமேஷ் உங்களுக்கு எத்தனை மனைவி? ஓ இதெல்லாம் தனியா கேட்டுக்கிறேன். பப்ளிக்கா கேட்கக் கூடாதுல்ல என ஐஸ்வர்யா ராஜேஷ் மேடையில் பேசியுள்ள வீடியோ தீயாக பரவி வருகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை என்றும் இப்படியெல்லாமா? மேடையில் பேசுவார்கள்.. அந்த படத்தின் லீடு ரோல் என்பதால் சக நடிகரின் பர்சனல் விஷயங்களை வைத்து மேடையில் கலாய்ப்பது போல அநாகரிகமாக பேசலாமா? என நெட்டிசன்கள் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை விளாசி வருகின்றனர்.

ஜித்தன் ரமேஷ் குடும்பம்: தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரியின் மகனும் நடிகர் ஜீவாவின் அண்ணனுமான ரமேஷ் ஜித்தன் படத்தில் ஹீரோவாக அறிமுகமான நிலையில், ஜித்தன் ரமேஷ் என்றே அழைக்கப்பட்டு வருகிறார்.
பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட ஜித்தன் ரமேஷ் ஏகப்பட்ட மீம்கள் வெளியாக காரணமாக இருந்தார். கடந்த 2006ம் ஆண்டு ஷில்பா என்பவரை மணந்து கொண்டார். அவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











