போகட்டும் ரைட்..... ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் டிரைவர் ஜமுனா ஷூட்டிங் ஆரம்பம் !

சென்னை : ஐஸ்வர்யா ராஜேஷ் கார் ஓட்டுநராக நடிக்கும் டிரைவர் ஜமுனா திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

Recommended Video

Aishwarya Rajesh திருமணக்கோலம்? Shock ஆனா Fans | The Great Indian Kitchen

இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு , இந்தி என 3 மொழிகளில் தயாராக உள்ளது.

இன்று பூஜை

இன்று பூஜை

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்துக் கொண்டு இருக்கிறார். இவரது நடிப்பில் ஒடிடியில் வெளியான க.பெ.ரணசிங்கம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கவனமாக திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடித்து வரும் ஐஸ்வர்யா, தற்போது கால்டாக்சி டிரைவராக நடிக்க இருக்கிறார். டிரைவர் ஜமுனா என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது.

 கால்டாக்சி டிரைவராக

கால்டாக்சி டிரைவராக

வத்திக்குச்சி படத்தை இயக்கிய டைரக்டர் கின்ஸ்லின் இயக்கும் இந்த படத்தில் பெண் கால்டாக்சி டிரைவராக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். பொதுவாக தமிழ் சினிமாவில் கால்டாக்சி டிரைவர்கள் பற்றி வெளியான திரைப்படங்கள் மிகவும் குறைவு. அதில் பெண் டாக்சி டிரைவர் பற்றிய முதல் படமாக இது இருக்கும் என தெரிவித்துள்ளார் படத்தின் இயக்குனர்.

தயாராகிறது

தயாராகிறது

18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக எஸ்.பி. சௌத்ரி மிகப்பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராக உள்ளது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக கோகுல் பினாய், எடிட்டராக ஆர்.ராமர் பணிபுரிந்துள்ளனர். இந்த படம் கால்டாக்சி டிரைவர் பற்றி மட்டுமல்லாமல், க்ரைம் த்ரில்லராகவும் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

நடித்துள்ளார்

நடித்துள்ளார்

இடம் பொருள் ஏவல், இந்தியன்2, நவரசா,பூமிகா, திட்டம் இரண்டு, துருவநட்சத்திரம், இது வேதாளம் சொல்லும் கதை ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X