முதல் மனைவியை பிரிந்த ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன்.. ரகசியமாக 2வது திருமணம்.. குழந்தையும் பிறந்தாச்சு!

சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக கடந்த சில ஆண்டுகளாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. இதுகுறித்து, மணிகண்டன் கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்ததால், இது வெறும் வதந்தி என சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது, தனக்கு இரண்டாவது திருமணமாகி குழந்தை பிறந்து இருப்பதை போட்டோவுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். அவள் என்ற சீரியலில் நடித்து சின்னத்திரையில் தனது அறிமுகத்தை கொடுத்தார். அதைத்தொடர்ந்து, அழகு, சிவா மனசுல சக்தி, தாய் வீடு, நாச்சியார் என பல சீரியல்களில் நடித்து பிரபலமானார். சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தபோது தன்னுடன் நடித்த நடிகை சோபியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஆர்யன் என்கின்ற மகன் இருக்கிறார்.

Aishwarya Rajesh manikandan Divroce
Photo Credit:

நடிகர் மணிகண்டன்: சீரியல்களில் நடித்து வந்த மணிகண்டன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின், 'மை டியர் டயானா' என்கிற இணையத் தொடரில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து, சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் என்கிற படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்த படம் கடந்த மாதம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

நடிகர் மணிகண்டன்: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகர் மணிகண்டன் தனது மனைவி சோஃபியா விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக சோஷியல் மீடியாவில் பல செய்திகள் வந்தன. ஆனால், இது வெறும் வதந்தி என்பது போல, இதுகுறித்து இருவரும் எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த நிலையில் தற்போது, மணிகண்டன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேறு ஒரு பெண்ணுடன் கையில் குழந்தை இருக்கும் போட்டோவை பகிர்ந்து, தனக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கும் தகவலை பதிவிட்டுள்ளார். இதுவரை, தனது முதல் மனைவி சோஃபியாவை விவாகரத்து செய்தது பற்றியும், இரண்டாவது திருமணம் செய்தது பற்றியும் ரகசியமாக வைத்து இருந்த மணிகண்டன், முதல் முறையாக இரண்டாவது மனைவியின் போட்டோவை போட்டு , தனக்கு இரண்டாவது திருமணமானதை உறுதிப்படுத்தி உள்ளார்.

இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இணையத்தில் இந்த செய்தி காட்டுத்தீ போல பரவியதைத் தொடர்ந்து, மணிகண்டனின் முன்னாள் மனைவி சோஃபியா தனது இன்ஸ்டாகிராமில் அதற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். அதில், இனி வாழ்க்கை அழகான பாதையை நோக்கி போகும், அழகான அத்தியாயத்திற்காக நான் தயாராக இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X