Don't Miss!
- News
அடுத்த மூவ் என்ன? ஈரோட்டில் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பரபர ஆலோசனை
- Lifestyle
ஆண்களே! உங்க அக்குள் பகுதி அசிங்கமா கருமையா மாறாம தடுக்க... நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Sports
விராட் கோலி இனி தேவையில்லை.. இவருக்கு இனி வாய்ப்பு கொடுங்க.. தினேஷ் கார்த்திக் கருத்து
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சுடிதாரில் செம சிம்பிளாக வந்து காலையிலேயே வாக்களித்த ஐஸ்வர்யா ராஜேஎஷ்.. லைக் போடும் ரசிகர்கள்!
சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காலையிலேயே வந்து வாக்களித்துள்ள புகைப்படம் சமூகவலைதளங்களில் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப் போவது யாரு காமெடி ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளராக இருந்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், நீதானா அவன் எனும் தமிழ் படத்தின் மூலம் 2010ம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானார்.
2012ல் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டக்கத்தி திரைப்படம் ஐஸ்வர்யா ராஜேஷை ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது.
என்னது...வலிமை பார்ட் 2 எடுக்க போறாங்களா...அப்போ ஏகே 61 ?

சிறந்த நடிகை
கவர்ச்சி நடிகையாக நடிக்காமல் நல்ல கதைகளை கேட்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை, வடசென்னை, கனா, கா/பெ. ரணசிங்கம், திட்டம் இரண்டு உள்ளிட்ட படங்களில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். சென்னை பொண்ணான இவர் தொடர்ந்து தனது ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்றி வருகிறார்.

திநகரில் வாக்குப்பதிவு
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலையிலேயே திநகரில் உள்ள அரசுப் பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

சிம்பிளாக சுடிதாரில்
சினிமா படங்களில் எப்படி சிம்பிளாக இருக்கிறாரோ அதே போலவே செம சிம்பிளாக ஒரு சாதாரண சுடிதார் அணிந்து கொண்டு வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் வாக்களித்த புகைப்படம் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் அவரது எளிமைக்காக லைக் போட்டு வருகின்றனர். காலையிலேயே உங்களின் ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டீர்கள் சிறப்பான விஷயம் என பாராட்டி வருகின்றனர்.
Recommended Video


கிரேட் இந்தியன் கிச்சன்
மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் தமிழ் வெர்ஷனில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். விரைவில் அந்த திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. மேலும், விஷ்ணு விஷாலின் மோகன்தாஸ், டிரைவர் ஜமுனா, துருவ நட்சத்திரம் உள்ளிட்ட தமிழ் படங்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் கைவசம் உள்ளன.