விஷ்ணு விஷால் படத்தோட சூட்டிங்கை முடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்... கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு
சென்னை : களவு படத்தின் இயக்குநரின் மோகன்தாஸ் படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து வருகிறார்.
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷூம் நடித்துள்ள நிலையில் அவரது போர்ஷனை அவர் முடித்துக் கொடுத்துள்ளார்.
இதையடுத்து அவரது இறுதி நாள் சூட்டிங்கை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
கோலிவுட்டின் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய கேரக்டர் சிறியதாக இருந்தாலும் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தால் உடனடியாக ஓகே சொல்லி நடித்து கொடுத்து வருகிறார். இதன்மூலம் தொடர்ந்து தன்னை கோலிவுட்டின் முன்னணி நடிகையாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

விஷ்ணு விஷால் நாயகன்
அவர் தற்போது அரை டஜனுக்கும் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஷ்ணு விஷால் நடிப்பில் களவு படத்தின் இயக்குநர் முரளி கார்த்திக் இயக்கியுள்ள மோகன்தாஸ் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். படத்தில் அவரது கேரக்டர் சிறியதாக இருந்தாலும் முக்கியமான கேரக்டராக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

கேக் வெட்டி கொண்டாட்டம்
இந்நிலையில் படத்தில் தனது போர்ஷனை அவர் முடித்துக் கொடுத்துள்ளார். மேலும் டப்பிங்கையும் அவர் முடித்துள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது இறுதி நாள் சூட்டிங்கை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த கொண்டாட்டத்தில் விஷ்ணு விஷால் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.
Recommended Video

ஐஸ்வர்யா பாராட்டு
கேக்கை வெட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ் அதை விஷ்ணுவிற்கு ஊட்டி விட்ட காட்சிகளையும் படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர். இதனிடையே டைரக்டர் முரளி கார்த்திக் தன்னுடைய கேரக்டரை படத்தில் சிறப்பாக வடிவமைத்துள்ளதாக ஐஸ்வர்யா ராஜேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











