ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இதே பொழப்பா போச்சு.. அப்போ அதை மறந்தாரு.. இப்போ இதை? #4yearsofDharmadurai
சென்னை: விஜய்சேதுபதியின் தர்மதுரை படம் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
Recommended Video
விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட நாயகிகள் மற்றும் படக்குழுவினர் அந்த கொண்டாட்டத்தை கொண்டாடி வருகின்றனர்.
ஆனால், ஐஸ்வர்யா ராஜேஷ் பதிவிடும் போது 4 ஆண்டுகள் என்பதற்கு பதிலாக 3 ஆண்டுகள் என பதிவிட்டது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

சீனு ராமசாமி படம்
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான படம் தர்மதுரை. ஆழமான திரைக்கதை மற்றும் அற்புதமான நடிகர்கள் தேர்வால் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆர்.கே. சுரேஷ் தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்தார்.

4 ஆண்டுகள்
இந்த படம் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனை கொண்டாடும் விதமாக #4yearsofDharmadurai என்ற ஹாஷ்டேக்கை காலை முதலே ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் பதிவிட்டு டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். தங்களின் மறக்க முடியாத நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

தமன்னா நெகிழ்ச்சி
என்னால நம்பவே முடியல.. அதுக்குள்ள பிளாக்பஸ்டர் தர்மதுரை படம் ரிலீசாகி 4 ஆண்டுகள் கடந்து விட்டன. அந்த படத்தின் ஷூட்டிங்கில் என்ஜாய் பண்ண தருணங்கள் எப்போதுமே நினைவில் இருக்கும் என நடிகை தமன்னா #4yearsofDharmadurai என்ற ஹாஷ்டேக்கை பதிவிட்டு தர்மதுரை 4ம் ஆண்டு கொண்டாட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டார். அதே போல சிருஷ்டி டாங்கேவும் ட்வீட் போட்டுள்ளார்.

அவரே கன்ஃபியூஸ் ஆகிட்டாரு
#ThreeYearsofDharmadurai! என்ற ஹாஷ்டேக்கை போட்டு, எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், தர்மதுரை படத்தில் நடித்த அன்பு செல்வி கதாபாத்திரம் என் நெஞ்சில் நீங்காமல் நிறைந்திருக்கும் என ஐஸ்வர்யா ராஜேஷ் ட்வீட் போட, நம்ம நக்கீரன் நெட்டிசன்கள், ஏன்மா இது போன வருஷத்துக்கு போட்ட ட்வீட்டா என்றும், இப்போ 4 வருஷம் ஆகிடுச்சு என்றும் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். அதை அறிந்த அவர், அதற்கு மன்னிப்பும் கேட்டு 4 வருடம் என மாற்றிக் கொண்டார்.

காக்கா முட்டைக்கும் இப்படித்தான்
சமீபத்தில், காக்கா முட்டை படத்தின் 5ம் ஆண்டு கொண்டாட்டத்திற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் ட்வீட் போட்ட போது, இயக்குநர் மணிகண்டனை மட்டுமே பாராட்டி இருந்தார். ரசிகர்கள் அவரது ட்வீட்டுக்கு கீழே, தனுஷும், வெற்றிமாறனும் இல்லை என்றால் படம் ரிலீஸ் ஆகியே இருக்காது என பதிவு போட, உடனடியாக அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்து ஐஸ்வர்யா ராஜேஷ்.


Click it and Unblock the Notifications











