அடிச்சி தூக்குது காரு.. ஐஸ்வர்யா ராஜேஷின் ‘டிரைவர் ஜமுனா‘ டிரைலர் ரிலீஸ் !
சென்னை : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் டிரைவர் ஜமுனா திரைப்படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியாகி உள்ளது.
தென்னிந்திய சினிமாவில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்தி வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் டஜன் கணக்கில் திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து முடித்துள்ள திரைப்படம் டிரைவர் ஜமுனா. இப்படத்தில் அவர் கார் ஓட்டுனராக நடித்துள்ளார் இப்படத்தை பதினெட்டு ரீல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழ் சினிமாவின் சிறந்த நடிகைகளின் பட்டியலில் ஐஸ்வர்யா ராஜேஷின் பெயர் நிச்சயம் இருக்கும். எதார்த்தமாக நடித்து ஒட்டுமொத்த ஆடியன்ஸ் மனதையும் தன்வசம் திருப்பிவிடுவார். சமீபத்தில் இவரது நடிப்பில் கிரைம் திரில்லர் பாணியில் உருவான சுழல் வெப் சீரியஸ் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியானது. 8 எபிசோடுகள் கொண்ட இந்த தொடரில் ஐஸ்வர்யா ராஜேஷ் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

டிரைவர் ஜமுனா.
இந்த வரிசையில் அடுத்ததாக வத்திக்குச்சி படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் திரைப்படம் டிரைவர் ஜமுனா. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் வாடகை கார் ஓட்டுநராக நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாக வைரலான நிலையில், இன்று படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

மிரட்டலான
அந்த டிரைலரில் ஒரு கொலை கும்பல் பிரமுகர் ஒருவரை கொலை திட்டம் தீட்டுகிறது. அவர்கள் ஐஸ்வர்யா ராஜேஷின் காரை பயன்படுத்தி பிரமுகரை கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார்கள். அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த அந்த டிரைலரில், அதிவேகமாக காரை ஓட்டி அடித்து தூக்குகிறார் ஐஸ்வர்யா, தற்போது வெளியாகி உள்ள டிரைலர் பார்ப்பவர்களை கண் இமைக்காமல் பார்க்க வைத்துள்ளது.

3 மொழிகளில்
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் வெளிவரவுள்ள டிரைவர் ஜமுனா திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். வத்திக்குச்சி படத்தை இயக்கிய கின்ஸ்லின் படத்தை இயக்குகிறார். க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பான நடைபெற்று வருகிறது.

கைவசம் ஏராளமான பங்கள்
ஐஸ்வர்யா ராஜேஷ் தி கிரேட் இந்தியன் கிச்சன் மலையாள படத்தின் தமிழ் ரீமேக் படம், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ள துருவநட்சத்திரம், விஷ்ணு விஷால் உடன் இணைந்து மோகன்தாஸ், ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் இணைந்து தீயவர் கொலைகள் நடுங்க உள்ளிட்ட படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











