Aishwarya Rajesh - ராஷ்மிகாவை அப்படி சொன்னேனா?.. ஜெர்க் ஆகி விளக்கம் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்
சென்னை: Aishwarya Rajesh (ஐஸ்வர்யா ராஜேஷ்) ராஷ்மிகா மந்தனா குறித்து தான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கமளித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "நான் சினிமாவுக்கு வந்ததில் இருந்து நீங்கள் என்மீது காட்டி வரும் நிபந்தனையற்ற அன்புக்கும், ஆதரவிற்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். என் மீதும், பணியின் மீதும் அன்பை செலுத்தும் அற்புதமான ரசிகர்களை பெற்றிருப்பதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

தவறாக புரிந்துகொள்ளப்பட்டது: சமீபத்தில் ஒரு பேட்டியின் போது, என்னிடம் சினிமாவில் நான் எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன் என கேட்கப்பட்டது. அதற்கு, எனக்கு தெலுங்கு சினிமா ரொம்ப பிடிக்கும். எனக்கு விருப்பமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் மீண்டும் தெலுங்கு சினிமாவில் நடிப்பேன். உதாரணமாக புஷ்பா படத்தில் வரும் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும் என கூறியிருந்தேன். ஆனால் என்னுடைய பதில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.
மிகுந்த மரியாதை: புஷ்பா படத்தில் நடிகை ராஷ்மிகாவின் கடின உழைப்பை ஒருபோதும் நான் குறை கூறவில்லை.எனது பேச்சால் ஏற்பட்ட குழப்பத்தை நீக்குவதற்காக இந்த விளக்கத்தை அளிக்கிறேன். ராஷ்மிகாவின் பணி மீது எனக்கு ஆழ்ந்த மரியாதை உண்டு. மேலும், திரையுலகை சார்ந்த சக நடிகர், நடிகைகள் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பதை இதன்மூலம் தெளிவுப்படுத்துகிறேன். நான் உதாரணமாக கூறிய பதில் தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டு விட்டது" என தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது: முன்னதாக ஃபர்ஹானா படத்தின் புரோமோஷனுக்காக கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், "தெலுங்கு திரையுலகம் என்றால் எனக்கு ரொம்பவே பிடிக்கும். கம்பேக் கொடுப்பதற்கு எனக்கு ஒரு நல்ல படம் அமைய வேண்டும். விஜய் தேவரகொண்டாவுடன் நான் நடித்த ஏர்ல்டு பேமஸ் லவ்வர் ம்ப எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அது எனக்கு ஏமாற்றமாகவே அமைந்தது.
நல்ல கதாபாத்திரங்கள் நடித்தால் மீண்டும் தெலுங்கில் நடிக்க தயாராக இருக்கிறேன். புஷ்பா படத்தில் ராஷ்மிகாவின் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் எனக்கு ரொம்பவே பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். ரஷ்மிகா மந்தனா அந்தக் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். ஆனால் நான் இன்னும் அந்தக் கதாபாத்திரத்திற்கு மிக சிறப்பாகவே பொருந்தியிருப்பேன்" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வீட்டுக்கு பாதுகாப்பு: இதற்கிடையே நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஃபர்ஹானா படத்தில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். படமானது கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. படத்தின் ட்ரெயலர் வெளியானதில் இருந்தே படத்துக்கு இஸ்லாமியர்களில் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் படத்தில் இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தும் காட்சிகள் எதுவுமே இல்லை என படக்குழு தொடர்ந்து விளக்கமளித்துவந்தது. இருந்தாலும் படத்தை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்தது. பரபரப்பான சூழலில் படம் வெளியானதை அடுத்து ஐஸ்வர்யாவின் வீட்டுக்கு காவல் துறையினர் பாதுகாப்பு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னை: Aishwarya Rajesh (ஐஸ்வர்யா ராஜேஷ்) ராஷ்மிகா மந்தனா குறித்து தான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கமளித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "நான் சினிமாவுக்கு வந்ததில் இருந்து நீங்கள் என்மீது காட்டி வரும் நிபந்தனையற்ற அன்புக்கும், ஆதாரவிற்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். என் மீதும், பணியின் மீதும் அன்பை செலுத்தும் அற்புதமான ரசிகர்களை பெற்றிருப்பதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.
தவறாக புரிந்துகொள்ளப்பட்டது: சமீபத்தில் ஒரு பேட்டியின் போது, என்னிடம் சினிமாவில் நான் எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன் என கேட்கப்பட்டது. அதற்கு, எனக்கு தெலுங்கு சினிமா ரொம்ப பிடிக்கும். எனக்கு விருப்பமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் மீண்டும் தெலுங்கு சினிமாவில் நடிப்பேன். உதாரணமாக புஷ்பா படத்தில் வரும் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும் என கூறியிருந்தேன். ஆனால் என்னுடைய பதில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.
மிகுந்த மரியாதை: புஷ்பா படத்தில் நடிகை ராஷ்மிகாவின் கடின உழைப்பை ஒருபோதும் நான் குறை கூறவில்லை.எனது பேச்சால் ஏற்பட்ட குழப்பத்தை நீக்குவதற்காக இந்த விளக்கத்தை அளிக்கிறேன். ராஷ்மிகாவின் பணி மீது எனக்கு ஆழ்ந்த மரியாதை உண்டு. மேலும், திரையுலகை சார்ந்த சக நடிகர், நடிகைகள் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பதை இதன்மூலம் தெளிவுப்படுத்துகிறேன். நான் உதாரணமாக கூறிய பதில் தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டு விட்டது" என தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது: முன்னதாக ஃபர்ஹானா படத்தின் புரோமோஷனுக்காக கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், "தெலுங்கு திரையுலகம் என்றால் எனக்கு ரொம்பவே பிடிக்கும். கம்பேக் கொடுப்பதற்கு எனக்கு ஒரு நல்ல படம் அமைய வேண்டும். விஜய் தேவரகொண்டாவுடன் நான் நடித்த ஏர்ல்டு பேமஸ் லவ்வர் ம்ப எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அது எனக்கு ஏமாற்றமாகவே அமைந்தது.
நல்ல கதாபாத்திரங்கள் நடித்தால் மீண்டும் தெலுங்கில் நடிக்க தயாராக இருக்கிறேன். புஷ்பா படத்தில் ராஷ்மிகாவின் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் எனக்கு ரொம்பவே பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். ரஷ்மிகா மந்தனா அந்தக் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். ஆனால் நான் இன்னும் அந்தக் கதாபாத்திரத்திற்கு மிக சிறப்பாகவே பொருந்தியிருப்பேன்" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வீட்டுக்கு பாதுகாப்பு: இதற்கிடையே நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஃபர்ஹானா படத்தில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். படமானது கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. படத்தின் ட்ரெயலர் வெளியானதில் இருந்தே படத்துக்கு இஸ்லாமியர்களில் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் படத்தில் இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தும் காட்சிகள் எதுவுமே இல்லை என படக்குழு தொடர்ந்து விளக்கமளித்துவந்தது. இருந்தாலும் படத்தை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்தது. பரபரப்பான சூழலில் படம் வெளியானதை அடுத்து ஐஸ்வர்யாவின் வீட்டுக்கு காவல் துறையினர் பாதுகாப்பு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Click it and Unblock the Notifications