அட இதுக்குத்தான்.. அவசர அவசரமா.. அந்த டிசர்ட் போட்டோ ட்வீட்டை ஐஸ்வர்யா ராஜேஷ் டெலிட் பண்ணாங்களா?

சென்னை: "இந்தி தெரியாது போடா" என அச்சிடப்பட்ட அந்த டி சர்ட் போட்டோவை ஐஸ்வர்யா ராஜேஷ் அவசர அவசரமா நீக்க அந்த வீடியோ தான் காரணம் என்கின்றனர்.

யுவன் சங்கர் ராஜா, சிரிஷ், சாந்தனு, கிக்கி விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் "இந்தி தெரியாது போடா", "ஐ எம் தமிழ் ஸ்பீக்கிங் இந்தியன்" உள்ளிட்ட டி சர்ட்களை அணிந்த படி போஸ் கொடுத்து புதிய சர்ச்சையை கிளப்பினர்.

#ஹிந்தி_தெரியாது_போடா என்ற ஹாஷ்டேக் இந்தியளவில் டிரெண்டானது.

அதே டி சர்ட் அணிந்து

அதே டி சர்ட் அணிந்து

ஏகப்பட்ட தமிழர்கள் இந்தி திணிப்புக்கு எதிராக அந்த டி சர்ட் புகைப்படம் டிரெண்ட் ஆவதை ஷேர் செய்து வந்த நிலையில், மெட்ரோ படத்தின் ஹீரோ சிரிஷிடம் ஆர்டர் செய்து அந்த டி சர்ட்டை வாங்கிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தனது சகோதரர் உடன் இணைந்து எடுத்துக் கொண்ட அந்த டி சர்ட் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

ஆதரவும் எதிர்ப்பும்

ஆதரவும் எதிர்ப்பும்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த டிரெண்டிங்கில் கால் வைத்த நிலையில், அவரது ரசிகர்கள் அவருக்கு ஆதரவு அளிக்க தொடங்கினர். ஆனால், சில நெட்டிசன்கள், இந்தி படத்தில் நடித்த நீங்கள் எப்படி இந்த டி சர்ட்டை அணியலாம். உங்களுக்கு உண்மையாகவே இந்தி தெரியாதா? என்ற கேள்வி எழுப்பி அவரை எதிர்த்தனர்.

உடனடியா டெலிட்

உடனடியா டெலிட்

நெட்டிசன்களின் எதிர்ப்பை கணடதுமே நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், "இந்தி தெரியாது போடா" டி சர்ட் உடன் போஸ் கொடுத்த போட்டோ ட்வீட்டை உடனடியாக டெலிட் செய்து விட்டார். பின்னர் க/பெ. ரணசிங்கம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான "அழகிய சிறுக்கி" பாடல் ரிலீஸ் அறிவிப்பு குறித்த ட்வீட்டை ஐஸ்வர்யா ராஜேஷ் போட்ட நிலையில், வரிந்து கட்டிக் கொண்டு அவரை திட்டத் தொடங்கி விட்டனர்.

இந்தி பேசும் வீடியோ

இந்தி பேசும் வீடியோ

கடந்த 2017ம் ஆண்டு அர்ஜுன் ராம்பால் நடிப்பில் வெளியான Daddy எனும் இந்தி படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். அது தொடர்பாக நடத்தப்பட்ட கபில் சர்மா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், தெளிவாக இந்தியில் பேசிய வீடியோவை தற்போது நெட்டிசன்கள் பகிர்ந்து, ஐஸ்வர்யா ராஜேஷை கண்டபடி திட்டி வருகின்றனர்.

கண்டபடி விளாசல்

கண்டபடி விளாசல்

இந்தி நல்லா தெரியும், இந்தி படத்துல நடிச்சிருக்காங்க, ஆனால், இந்தி தெரியாது போடா என டி சர்ட் போட்டு தமிழ் மக்களை ஏமாத்துறாங்க, எவ்வளவு காசு வாங்குனீங்க, போலி புரட்சியாளர் என கண்டபடி நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். இதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் என்ன விளக்கம் கொடுக்க உள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X