ஐயப்பனும் கோஷியும் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்...மாஸ் அப்டேட் !

ஹைதராபாத் : சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருவது பிரபல மலையாள திரைப்படமான ஐயப்பனும் கோஷியும் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுவதைப்பற்றித்தான்.

அதுவும் தெலுங்கில் முன்னணி நடிகர்களாக உள்ள ராணா மற்றும் பவன் கல்யாண் இருவரும் இணைந்து கலக்க இருக்கும் இந்த கதாபாத்திரங்கள் செம வெயிட்டானது.

இவ்வாறு ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்தின் செய்திகள் தெலுங்கு சினிமாவை பரபரப்பாகி வரும் நிலையில் இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.

பாராட்டு மழையில்

பாராட்டு மழையில்

இந்த ஆண்டு ஆரம்பத்தில் மலையாளத்தில் வெளியான சிறந்த திரைப்படமாக கொண்டாடப்பட்டு வரும் ஐயப்பனும் கோஷியும் வெளியான நாள் முதல் பாராட்டு மழையில் நனைந்து வரும் நிலையில் திரையில் பல நாட்கள் தொடர்ந்து ஓடி வசூலை வாரி குவித்தது.

மாஸ் காட்டி

மாஸ் காட்டி

ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிக்கும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரும் இடையே நடக்கும் ஈகோ மோதலை மிகவும் சுவாரஸ்யமான முறையில் இயக்குனர் இயக்கியிருக்க இதில் நடிகர் பிரித்விராஜ் மற்றும் பிஜூ மேனன் நடிப்பில் மாஸ் காட்டி இருப்பார்கள்.

தமிழில் ரீமேக்

தமிழில் ரீமேக்

குறிப்பாக இவர்கள் அடிக்கடி மோதிக் கொள்ளும் காட்சிகள் பார்க்கும் அனைவரையும் படபடக்க வைத்த நிலையில் இந்த எதார்த்தமான திரைப்படம் மலையாள ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு ரசிகர்களையும் மிகவும் கவர்ந்த நிலையில், ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு மற்றும் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக சில மாதங்களாகவே பேச்சுக்கள் அடிபட்டு வந்தன.

பெயர்கள் அடிபட்டு

பெயர்கள் அடிபட்டு

இந்த நிலையில் தமிழில் கார்த்தி, பார்த்திபன், சசிகுமார்,சரத்குமார் போன்ற நடிகர்களின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் இன்று வரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தமிழில் வெளியாகவில்லை. எனினும் தெலுங்கில் இதைப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கில் பிரபல முன்னணி நடிகர்களாக உள்ள பவன் கல்யாண் மற்றும் ராணா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் ராணாவும், பிஜு மேனன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது உறுதியாகியுள்ள நிலையில், இதில் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மூன்று கதாநாயகிகளில்

மூன்று கதாநாயகிகளில்

க/பெ ரணசிங்கம் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் உணர்வுப்பூர்வமான நடிப்பு பலராலும் பாராட்டப்பட்ட நிலையில் தெலுங்கிலும் பல திரைப்படத்தில் நடித்து வரும் இவர் சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவின் "வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்" திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து அசத்தியிருப்பார்.

தெலுங்கு ரீமேக்கில்

தெலுங்கு ரீமேக்கில்

இந்த நிலையில் பவன்கல்யாண், ராணா இணைந்து நடிக்கும் ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கில் ராணாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X