அரை டஜன் படங்களுடன் சிறப்பான பயணம்... ஐஸ்வர்யா ராஜேஷ் ஹாப்பி அண்ணாச்சி

சென்னை : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அது சிறிய ரோலாக இருந்தாலும் அழுத்தமான கேரக்டர் என்றால் அவரிடம் நடிப்பதற்கு சம்மதம் பெற்று விடலாம்.

லாக்டவுனால் வீட்டில் உள்ள அவர் கைவசம் 6 படங்கள் உள்ளன. இதில் பூமிகா படத்தில் அவருக்கு சிறப்பான கேரக்டர் என்று கூறப்படுகிறது.

அழுத்தமான கேரக்டர்கள்

அழுத்தமான கேரக்டர்கள்

நடிகை ஐஸ்வர்யாக ராஜேஷ் கிராமத்து கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்து பெயர் பெற்றவர். அந்த கதாபாத்திரங்கள் மிகவும் அழுத்தமானவையாக அவருக்கு அமைந்தன. குறிப்பாக விஜய் சேதுபதியுடன் இணைந்து அவர் நடித்த படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தன.

கோலிவுட்டின் பிசி நடிகை

கோலிவுட்டின் பிசி நடிகை

தொடர்ந்து மாடர்ன் கதாபாத்திரங்களிலும் அவர் நடித்தார். அவற்றிலும் அவர் வரவேற்பை பெற்றாலும் கிராமத்து கதாபாத்திரங்களே அவர்குறித்து அதிகமாக பேச வைத்தன. அவரது இயல்பான நடிப்பு அவரை ரசிகர்கள் பக்கம் இழுத்தது என்று கூறலாம். தொடர்ந்து கோலிவுட்டின் பிசியான நடிகையாக அவர் வலம் வருகிறார்.

பூமிகா படம்குறித்து எதிர்பார்ப்பு

பூமிகா படம்குறித்து எதிர்பார்ப்பு

தற்போது லாக்டவுன் காரணமாக சூட்டிங் இல்லாமல் வீட்டில் இருந்தாலும் அவரது கைவசம் 6 படங்கள் உள்ளன. முக்கியமாக ஹாரர் -த்ரில்லர் படமாக உருவாகிவரும் பூமிகா படத்தை அவர் மிகவும் எதிர்பார்த்துள்ளார். நம்மால் அழிக்கப்படும் இயற்கை நமக்கு எதிராக திரும்பினால் என்ன ஆகும் என்பதை இந்த படம் விளக்குகிறது.

பிசியான ஐஸ்வர்யா

பிசியான ஐஸ்வர்யா

இந்நிலையில் நானியுடன் தெலுங்கில் டக் ஜெகதீஷ், டிரைவர் ஜமுனா, திட்டம் இரண்டு, துருவ நட்சத்திரம் மற்றும் இது வேதாளம் சொல்லும் கதை என்று பூமிகாவுடன் சேர்த்து 6 படங்களில் அவர் ஒப்பந்தமாகியுள்ளார். கொரோனா லாக்டவுன் ரிலீஸ் அறிவிக்கப்பட்டவுடன் அடுத்தடுத்து இந்த படங்களின் சூட்டிங்கில் அவர் பங்கேற்க உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X