விஜய்யை பார்த்தால் அந்த கேள்வியை தான் கேட்பேன்: ஐஸ்வர்யா ராஜேஷ்
சென்னை: விஜய்யை பார்த்தால் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்ற முடிவில் உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
செக்கச் சிவந்த வானம், வட சென்னை என்று அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். சிவகார்த்திகேயன் தயாரிக்கும் கனா படத்தில் அவர் தான் ஹீரோயின்.
இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
தளபதி
ஐஸ்வர்யா ராஜேஷிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் தளபதி விஜய் என்று பதில் அளித்துள்ளார்.
அஜித்
தல பற்றி ஒருவர் கேட்டதற்கு ஐஸ்வர் ராஜேஷ், தல தல தான். அவர் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது என்றார்.
சூர்யா
உங்களுக்கு பிடித்த சூர்யா படம் எது? அவருடன் எப்பொழுது சேர்ந்து நடிப்பீர்கள்? வட சென்னையில் உங்களின் நடிப்பு பிடித்திருந்தது என்று ரசிகர் ஒருவர் ட்வீட்டினார். அதை பார்த்த ஐஸ்வர்யா, சத்தியமா தெரியவில்லை. சூர்யாவுடன் சேர்ந்து நடிக்க காத்திருக்கிறேன் என்றார்.
காத்திருப்பு
ஐஸ்வர்யா விஜய்யுடன் சேர்ந்து நடிக்க காத்திருக்கிறார். அதனால் அவரை பார்த்தால் எப்போ என்னுடன் சேர்ந்து நடிக்கப் போகிறீர்கள் என்று கேட்பாராம்.
சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் தங்கமான மனிதர் என்று தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா.
விஜய்
தெளிவான பதில். நீங்கள் பிழைத்துக் கொள்வீர்கள் ஐஸ்வர்யா


Click it and Unblock the Notifications











