37 வருடத்துக்குப் பின் ரீமேக் ஆகும் முந்தானை முடிச்சு.. சசிகுமார் ஜோடியாக இவர்தான் நடிக்கிறாராமே!

By

சென்னை: 37 வருடத்துக்கு பிறகு ரீமேக் ஆகும் முந்தானை முடிச்சு படத்தில் சசிகுமார் ஜோடியாக நடிப்பது யார் என்பது தெரியவந்துள்ளது.

கே.பாக்யராஜ் எழுதி, இயக்கி ஹீரோவாக நடித்து 1983-ஆம் ஆண்டு வெளியான படம் முந்தானை முடிச்சு.

ஏவிஎம் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில் பாக்யராஜ் மனைவியாக ஊர்வசி நடித்திருந்தார்.

இளையராஜா

இளையராஜா


தீபா, கே.கே.செளந்தர், 'பசி' சத்யா உள்பட பலர் நடித்திருந்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.
இளையராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் பாடல்கள் ஹிட்டாகின. படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் வெளியாகி 37 ஆண்டுகள் ஆன நிலையில் இதை ரீமேக் செய்ய இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது.

நடிகர் சசிகுமார்

நடிகர் சசிகுமார்

இதன் ரீமேக்கில் சசிகுமார் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் இந்தப் படம் உறுதி செய்யப்பட்டது. நடிகர் பாக்யராஜை, சசிகுமார் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகிய பொறுப்புகளை கே. பாக்யராஜ் ஏற்கிறார். படத்தை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்குகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ்

படத்தை ஜேஎஸ்பி பிலிம் ஸ்டூடியோஸ் சார்பில் ஜேஎஸ்பி சதீஷ் தயாரிக்கிறார். இதில் சசிகுமார் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இதுபற்றிய அறிவிப்பை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான 3 படங்களை ரீமேக் செய்ய சசிகுமார் திட்டமிட்டிருந்தார். அதில் இப்போது முந்தானை முடிச்சு படத்தை ரீமேக் செய்வதாக சசிகுமார் ஏற்கனவே அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

அய்யப்பனும் கோஷியும்

அய்யப்பனும் கோஷியும்

இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது. சசிகுமார் நடிப்பில் எம்.ஜி.ஆர் மகன், கொம்புவச்ச சிங்கம்டா, நா நா, ராஜவம்சம் ஆகிய படங்கள் வர இருக்கின்றன. இதையடுத்து அவர் மலையாளத்தில் ஹிட்டான அய்யப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் மற்றொரு ஹீரோவாக யார் நடிக்கிறார் என்பதும் இயக்குனரும் இன்னும் முடிவாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X