சாமி 2ல் இருந்து விலகிய திரிஷா... புதிய மாமியானார் ஐஸ்வர்யா ராஜேஷ்!

விக்ரம் நடிக்கும் சாமி 2ல் திரிஷா கதாபாத்திரல் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பது தெரியவந்துள்ளது.

Recommended Video

சாமி 2ல் த்ரிஷாவிற்கு பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷ்..காரணம் என்ன?- வீடியோ

சென்னை: விக்ரம் நடிக்கும் சாமி படத்தின் இரண்டாம் பாகத்தில், திரிஷாவுக்கு பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த சாமி படம் கடந்த 2003ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. 15 ஆண்டுகள் கழித்து, இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்திலும் விக்ரம் ஹீரோவாக நடிக்க, ஹரியே இயக்கியிருக்கிறார்.

விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். பாபி சிம்ஹா வில்லன் கதாபாத்திரம் ஏற்றுள்ளார். தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் படத்தை தயாரித்துள்ளார்.

நாயகி திரிஷா

நாயகி திரிஷா

முதல் பாகத்தில் விக்ரமின் ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். இரண்டாம் பாகத்திலும் கீர்த்தி சுரேஷுடன் இன்னொரு நாயகியாக திரிஷாவே நடித்திருப்பதாக முன்னர் கூறப்பட்டது. இதனை ஹரியும் உறுதி செய்திருந்தார்.

திரிஷாவுக்கு பதில் ஐஸ்வர்யா

திரிஷாவுக்கு பதில் ஐஸ்வர்யா

ஆனால் சமீபத்தில் வெளியான சாமி 2 டிரெய்லரில் திரிஷா சம்மந்தப்பட்ட காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை. எனவே அவர் இதில் நடித்திருக்கிறாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில், இதனை உறுதிபடுத்தும் வகையில் சாமி 2ல் ஐஸ்வர்யா ராஜேஷ் மாமி கதாபாத்திரத்தில் விக்ரம் ஜோடியாக நடித்துள்ளது தெரியவந்தது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ்

இதுதொடர்பாக பட தயாரிப்பு நிறுவனம், விக்ரமும் ஐஸ்வர்யாவும் இணைந்திருக்கும் படத்தை வெளியிட்டுள்ளது. சாமி 2ல் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார் என்ற அறிவிப்பையும் அந்நிறுவனம் டிவிட்டரில் பதிவிட்டுள்ளது.

என்ன பிரச்சினை

என்ன பிரச்சினை

இதனால் திரிஷா ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். படத்தில் இருந்து அவர் விலகியதற்கு காரணம் கால்ஷீட் பிரச்சினையா அல்லது இரண்டாம் கதாநாயகியாக நடிக்க திரிஷா மறுத்துவிட்டாரா என்பது குறித்து கோலிவுட் வட்டாரத்தில் விவாதம் தொடங்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X