Aishwarya Rajesh - என் அண்ணன் என்னிடம் அதை கேட்க கூச்சப்படுவார்.. ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்

சென்னை: Aishwarya Rajesh (ஐஸ்வர்யா ராஜேஷ்) நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது அண்ணன் மணிகண்டன் குறித்து ஓபனாக பேசியிருக்கிறார்.

மானாட மயிலாட நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆன பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர்களும் இவர்களும் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அவர் தொடர்ந்து உயர்திரு 420, சட்டப்படி குற்றம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பிறகு பா.இரஞ்சித் இயக்குநராக அறிமுகமான அட்டகத்தி படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

Aishwarya Rajesh Open Talks about Her Brother Manikandan

முன்னணி நடிகை: அந்தப் படத்துக்கு பிறகு ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், கதை திரைக்கதை வசனம் இயக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். குறிப்பாக மணிகண்டன் இயக்கத்தில் அவர் நடித்த காக்கா முட்டை படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிலும் சினிமாவில் வளர்ந்துகொண்டிருக்கும் சமயத்தில் இரு குழந்தைகளுக்கு தாயாக அவர் நடித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

முன்னணி நடிகை: திறமையான நடிகையான அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க தர்மதுரை, குற்றமே தண்டனை, லட்சுமி, வடசென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். முக்கியமாக வடசென்னை படம் அவருக்கு பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. தற்போது அவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்துவருகிறார். அப்படி அவர் நடித்த சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா, ஃபர்ஹானா ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகின. இவற்றில் எந்தப் படமும் சொல்லிக்கொள்ளும்படி ஹிட்டாகவில்லை.

அண்ணன்: ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன் ஆவார். அவர் கடந்த பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் மணிகண்டன் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் பேசுகையில், "நான் நிறைய சம்பாதிக்கிறேன்; திரைத்துறையில் இருக்கிறேன் என்பதால் என்னிடம் எந்த ஒரு உதவியையும் என் அண்ணன் எதிர்பார்க்கமாட்டார்.

Aishwarya Rajesh Open Talks about Her Brother Manikandan

10,000 ரூபாய்: அவர் என்னிடம் பத்தாயிரம் ரூபாய் பணம் கேட்கக்கூட தயங்குவார். கூச்சப்படுவார். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முயற்சி செய்துகொண்டிருக்கிறார் என்று எனக்கு தெரியாது. எனக்கு தெரியாமலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அவருடைய பிரச்னையை அவரே சரி செய்துகொள்வார். அவரால் முடியாத பட்சத்தில்தான் என்னுடைய அம்மா வந்து அவனுக்கு பணம் தேவைப்படுகிறது. உன்னிடம் கேட்க கூச்சப்படுகிறான் என்று கூறுவார். இப்படியான கேரக்டர்தான் என் அண்ணன் மணிகண்டன்"" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X