இந்த படத்துல என்னை வேண்டவே வேண்டாம்னு சொன்னார் இயக்குநர்.. ’சொப்பன சுந்தரி’ ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு!
சென்னை: கனா படத்தின் வெற்றியை தொடர்ந்து பல உமன் சென்ட்ரிக் படங்களில் நடித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அவரது நடிப்பில் புதிதாக சொப்பன சுந்தரி படம் உருவாகி உள்ளது. அதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தனது கோபத்தை பற்றியும் இந்த படத்தில் தான் நடிக்கவே வேண்டாம் என இயக்குநர் கூறியது பற்றியும் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த டிரைவர் ஜமுனா திரைப்படம் வெளியானது.
சமீபத்தில், தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்திலும் சிறப்பான நடிப்பை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளிப்படுத்தி இருந்தார்.

கனா கொடுத்த வெற்றி
காக்கா முட்டை படத்திலேயே ஹீரோ இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் இரு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து அசத்தி இருப்பார் ஐஸ்வர்யா ராஜேஷ். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான கனா திரைப்படம் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மிகப்பெரிய வெற்றியையும் அங்கீகாரத்தையும் கொடுத்தது.

உமன் சென்ட்ரிக் படங்களில்
கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி நடிகர்களுடன் சமீப காலமாக ஜோடி போடாமல் உமன் சென்ட்ரிக் படங்களில் அதிகம் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 3 படங்கள் வெளியாகி விட்டன. டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் மற்றும் ரன் பேபி ரன் என படங்கள் வெளியாகி உள்ளன.

பெரிதாக ஓடுவதில்லை
ஆனால், கனா, க/பெ. ரணசிங்கம் படங்கள் ஓடிய அளவுக்கு சமீப காலமாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படங்கள் பெரிதாக ஓடுவதில்லை. ஆனாலும், விடா முயற்சியாக தொடர்ந்து புதிய படங்களில் கமீட் ஆகி நடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்ததாக இயக்குநர் சார்லஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள சொப்பன சுந்தரி படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். அதன் டிரைலரை இன்று அருண் ராஜா காமராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சொப்பன சுந்தரி
எஸ்.ஜி. சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், லக்ஷ்மி சந்திரமெளலி, தீபா சங்கர், ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள சொப்பன சுந்தரி படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது. சீரியசான படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் காமெடியான கதையை தேர்வு செய்து இந்த படத்தில் நடித்துள்ளார்.

வேண்டாம்னு சொன்ன இயக்குநர்
இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், இந்த படத்தில் முதலில் என்னை வேண்டவே வேண்டாம் என இயக்குநர் சார்லஸ் சொல்லிட்டு கிளம்பி விட்டார். அதன் பிறகு அவரை நான் அழைத்ததுமே தனது கோபத்தை விட்டு விட்டு என்னை சந்தித்தார். அதன் பின்னர் இந்த படம் ஆரம்பித்து தற்போது ரிலீசுக்கே வந்து விட்டது என்றார்.

கோபம் கெடுத்து விடும்
கோபத்தால் நான் நிறைய விஷயங்களை இழந்து உள்ளேன். கோபம் நம்மை ஒன்னுமில்லாமல் கெடுத்து விடும். கோபத்தை விட்டு விட்டு கூலாக இருந்தால், பல நன்மைகள் நமக்கு கிடைக்கும் என தனது கோப சுபாவத்தையும் சமீப காலமாக அதிலிருந்து தான் எப்படி மாறினேன் என்பது குறித்தும் பேசி பலரது கவனத்தையும் ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications











