Aishwarya Rajesh: “பலாத்காரம் பண்ணுங்கன்னு” சொல்லவே இல்லை... இயக்குநர் தான்: ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன்

சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சொப்பன சுந்தரி திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

சார்லஸ் இயக்கியுள்ள இந்தப் படம் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது.

சொப்பன சுந்தரி படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

 Aishwarya Rajesh opens up about the Rap Pannunga dialogue in Soppana Sundari

இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் மனம் திறந்துள்ளார்.

ரேப் பண்ணிடுங்கன்னு நான் சொல்லவே இல்லை
ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் படங்களைத் தொடர்ந்து சொப்பன சுந்தரி படத்திலும் லீட் ரோலில் நடித்துள்ளார். இந்தப் படம் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நாளை வெளியாகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷுடன் கருணாகரன், லக்‌ஷ்மி ப்ரியா சந்திரமெளலி, ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சார்லஸ் இயக்கியுள்ள சொப்பன சுந்தரி பக்கா காமெடி ஜானர் படமாக உருவாகியுள்ளது. இதனை இந்தப் படத்தின் ட்ரெய்லரை பார்க்கும் போதே கன்ஃபார்மாக தெரிகிறது.

 Aishwarya Rajesh opens up about the Rap Pannunga dialogue in Soppana Sundari

முக்கியமாக சொப்பன சுந்தரி படத்தின் ட்ரெய்லரில், "கண்டிப்பா என்ன ரேப் பண்ணிடுங்க சார்... நான் இத கெட்ட கனவா நினைச்சு மறந்துடுறேன்" என ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் வசனம் இடம்பெற்றுள்ளது. சொப்பன சுந்தரி ட்ரெய்லர் வெளியான போது இந்த வசனம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலானது. இந்த வசனத்தின் போது ஐஸ்வர்யா ராஜேஷின் ரியாக்‌ஷனையும் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வந்தனர்.

 Aishwarya Rajesh opens up about the Rap Pannunga dialogue in Soppana Sundari

இந்நிலையில், சொப்பன சுந்தரி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் "கண்டிப்பா ரேப் பண்ணிடுங்க சார்" வசனம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ், படப்பிடிப்பின் போது இந்த வசனத்தை பேச மாட்டேன் என இயக்குநரிடம் எவ்வளவோ கெஞ்சினேன். ஆனால், அவர் தான் கட்டாயப்படுத்தி பேச வைத்தார் என்றுள்ளார்.

மேலும், இப்போது படத்தின் எடிட்டிங் முடிந்த பின்னர் பார்க்கும் போது, அந்த வசனம் நன்றாகவே வந்துள்ளது. இந்நிலையில், முழுக்க முழுக்க காமெடியாக உருவாகியுள்ள சொப்பன சுந்தரி, கண்டிப்பாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். குலுக்கலில் பரிசாக கிடைக்கும் காருக்கு யார் சொந்தகாரர் என்பதே இப்படத்தின் ஒன்லைன் கதை என சொல்லப்படுகிறது.

சொப்பன சுந்தரி ஐஸ்வர்யா ராஜேஷ் கேரியரில் மிக முக்கியமான திரைப்படமாக இருக்கும் என இயக்குநர் சார்லஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கண்டிப்பா ரேப் பண்ணிடுங்க சார் வசனம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X