ஐஸ்வர்யா ராஜேஷின் "திட்டம் இரண்டு" மிக்ஸிங் பணிகள் முடிந்தது.. குஷியில் படக்குழு!

சென்னை : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ்,மலையாளம்,தெலுங்கு என மூன்று மொழிகளிலும் மிகப் பிரபலமான நடிகையாக முன்னிலை வகித்து வருகிறார்.

க. பெ.ரணசிங்கம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இப்பொழுது விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் திட்டம் இரண்டு என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையில் நடித்துள்ளார்.

படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து தொடர் லாக்டவுன் காரணமாக இதர பணிகள் தொடங்கப்படாமல் இருக்க இப்பொழுது முழு வீச்சில் மிக்ஸிங் பணிகளை முடித்து ரிலீஸுக்கு தயாராகிவிட்டது என படக்குழு படு குஷியில் உள்ளது.

நின்று பேசும்

நின்று பேசும்

ரம்மி, தர்மதுரை, ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க. பெ.ரணசிங்கம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதை என்பதால் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரம் படம் முழுவதும் நின்று பேசும் அளவிற்கு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

 இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக

இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக

தமிழைப் போலவே தெலுங்கிலும் ஒரு சுற்று வர தயாராகிக்கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ரிபப்ளிக் என்ற படத்தில் ஹீரோயினாகவும், நானி நடிக்கும் டக் ஜெகதீஸ் படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்து வருகிறார். இதேபோல மலையாளத்தில் மாபெரும் ஹிட்டடித்த அய்யப்பனும் கோஷியும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட அதில் ராணா மற்றும் பவன் கல்யாண் லீட் ரோலில் மோதுகின்றனர். இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

எடுத்து முடிக்கப்பட்டது

எடுத்து முடிக்கப்பட்டது

ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் அதேசமயம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் "திட்டம் இரண்டு" என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன்னரே எடுத்து முடிக்கப்பட்டது .

குஷியில் படக்குழு

குஷியில் படக்குழு

கொரோனா இரண்டாவது அலையால் தொடர் ஊரடங்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்டு இப்பொழுது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி திட்டம் இரண்டு படக்குழு இதர பணிகளை விறுவிறு வேகத்தில் செய்து வருகிறது. அந்த வகையில் முதல் வேலையாக மிக்ஸிங் பணிகளை முடித்துள்ளனர். ஸ்டூடியோவில் கம்போசர் மற்றும் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் ஆகியோர் படத்திற்கு மிக்ஸிங் முடித்த குஷியில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X