மருமகனுடன் கொஞ்சி விளையாடும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. செம க்யூட்டான வீடியோ!
சென்னை : மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.
பூமிகா,திட்டம் 2, டிரைவர் ஜமுனா மோகன்தாஸ் துருவ நட்சத்திரம் என தமிழில் கைவசம் அரை டஜனுக்கும் மேல் ரிலீசாக உள்ளது.
லாக்டவுன் என்பதால் வீட்டில் குடும்பத்தாருடன் நேரத்தை கழித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் மழை கிளைமேட்டில் மருமகனுடன் கொஞ்சி விளையாடிய க்யூட்டான வீடியோவை பகிர்ந்துள்ளார்.

தயங்காமல் நடித்து
பல திரைப் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு அட்டகத்தி மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்பொழுதும் ஹீரோயினாக நடித்து வரும் அதே சமயம் தங்கை, உள்ளிட்ட குணச்சித்திர வேடங்களிலும் தயங்காமல் நடித்து வருகிறார்.

தெலுங்கு ரீமேக்
தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் இவருக்கு மிகப் பெரிய மார்க்கெட் உள்ளதால் அங்கும் பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ள இவர் கனா தெலுங்கு ரீமேக்கில் நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார். இப்பொழுது ரிபப்ளிக், டக் ஜெகதீஷ் மற்றும் ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

ஆர். கண்ணன்
சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி அனைத்து தரப்பினரையும் கவர்ந்த தி கிரேட் இந்தியன் கிட்சன் தமிழில் ரீமேக் செய்யப்பட இயக்குனர் ஆர். கண்ணன் தயாரித்து இயக்குகிறார் . இதன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது.

மழை கிளைமேட்டை
நம்ம வீட்டுப் பிள்ளையில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்ததை தொடர்ந்து மற்ற திரைப்படங்களிலும் தங்கையாக நடிக்கும் வாய்ப்புகள் மட்டுமே வருவதால் இனி எந்த ஹீரோவுக்கு தங்கையாக நடிக்கப்போவதில்லை நடித்தால் ஹீரோயின் மட்டும் தான் என முடிவு எடுத்துள்ளாராம். மேலும் லாக் டவுனில் படப்பிடிப்புகள் அனைத்தையும் முடக்கப்பட்டுள்ளதால் வீட்டில் குடும்பத்தாருடன் பொழுதை கழித்து வரும் ஐஸ்வர்யா மழை கிளைமேட்டை மருமகனுடன் கொஞ்சி விளையாடும் க்யூட்டான வீடியோவை பதிவிட்டுள்ளது செம வைரல் வைரலாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











