Aishwarya Rajesh - திருமண கோலத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வெளியானது புலிமடா ஃபர்ஸ்ட் லுக்
சென்னை: Pulimada First Look (புலிமடா ஃபர்ஸ்ட் லுக்) ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புலிமடா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது.
மலையாளத்தில் ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த ஏ.கே.சாஜன், புலிமடா படத்தை எழுதி, இயக்கி, எடிட்டிங்கும் செய்துள்ளார். ஐன்ஸ்டீன் மீடியா மற்றும் லேண்ட் சினிமாஸ் பேனரில் ஐன்ஸ்டீன் சேக் பால் மற்றும் ராஜேஷ் தாமோதரன் ஆகியோர் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

இரட்டாவின் இரண்டாம் பாகம்: மலையாளத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த "இரட்டா" படத்திற்குப் பிறகு ஜோஜு ஜார்ஜ் நடிக்கும் அடுத்த படம் "புலிமடா". இப்படத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், பத்து வருட இடைவெளிக்குப் பிறகு பிரபல ஒளிப்பதிவாளர் வேணு படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். 60 நாட்களில் ஒரே ஷெட்யூலில் படமாக்கப்பட்டு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை கொண்ட மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகியிருக்கிறது. இது இரட்டா படத்தின் இரண்டாம் பாகம் என்றும் கூறப்படுகிறது.
லிஜோமோல்: த.செ.ஞானவேல் இயக்கி, சூர்யா நடித்து தமிழில் சூப்பர் ஹிட்டான ஜெய் பீம் படத்தில் நடித்த லிஜோமோலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவரைத் தவிர்த்து,செம்பன் வினோத், ஜானி ஆண்டனி, ஜாபர் இடுக்கி, ஜியோ பேபி, அபு சலீம், சோனா நாயர், கிருஷ்ண பிரபா, பாலி வில்சன், ஷிபிலா, பாலச்சந்திர மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்: இந்நிலையில் புலிமடா படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. அதில் திருமணம் கோலத்தில் ஜோஜு ஜார்ஜும், ஐஸ்வர்யா ராஜேஷும் ஓடுவது போன்று இருக்கிறது. ஜோஜு ஜார்ஜ் போலீஸ் கான்ஸ்டபிள் வின்சென்ட் ஸ்காரியா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திருமணம் தொடர்பான நிகழ்வுகளும், அதன் பிறகு அவரது குணாதிசயத்திலும், வாழ்க்கையிலும் ஏற்படும் மாற்றங்களும்தான் புலிமடா படத்தின் ஒன்லைன் என்பது குறிப்பிடத்தக்கது. இது நிச்சயம் வித்தியாசமாக இருக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.
ஹிட் கிடைக்குமா?: ஐஸ்வர்யா ராஜேஷும் வித்தியாசமான கதைக்களங்களைத்தான் சமீபத்தில் தேர்ந்தெடுக்கிறார். குறிப்பாக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கிறார். ஆனாலும் எதுவும் ஹிட் ஆகவில்லை. எனவே இந்தப் படமாவது ஹிட்டாகி தனது கரியரில் திருப்புமுனையை ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.


Click it and Unblock the Notifications











