Aishwarya Rajesh - ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படம்.. வெளியானது போஸ்டர்.. ரசிகர்கள் வரவேற்பு

சென்னை: Aishwarya Rajesh (ஐஸ்வர்யா ராஜேஷ்) ஏ.கே.சாஜன் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புலிமடா படத்தின் டைட்டில் போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்திருக்கிறார். இளம் நடிகையாக இருந்தாலும் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து அதில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி தன்னை பக்குவமான கலைஞராக மாற்றியிருக்கிறார். அவரது நடிப்புக்கு உதாரணமாக காக்கா முட்டை படத்தை சொல்லலாம்.

Aishwarya Rajesh Pulimada Movie Poster is Out Now

அந்தப் படம் வெளியானபோதெல்லாம் ஐஸ்வர்யா ராஜேஷ் இண்டஸ்ட்ரிக்குள் நுழைந்த புதிது. அப்படிப்பட்ட சமயத்தில் எந்த ஹீரோயினும் இரண்டு மகன்களுக்கு தாயாக நடிக்க யோசிப்பார். ஆனால் ஐஸ்வர்யா அப்படி இல்லை. அதனை துணிந்து செய்தார். அதன் பிறகு பெரும் ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் பட வாய்ப்புகள் கம்மியாகவே அவருக்கு கிடைத்தன.

வடசென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படங்களில் வடசென்னை படம் முக்கியமானது. அதில் தனது நடிப்பின் மூலம் தனுஷுக்கே டஃப் கொடுத்திருப்பார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர் கடைசியாக ஃபர்ஹானா படத்தில் நடித்தார். அந்தப் படம் சர்ச்சைகளை தாண்டி வெளியானாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

புதிய படம்: இந்தச் சூழலில் மலையாள இயக்குநர் ஏ.கே.சாஜன் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். கேரள மக்களால் பெரிதும் விரும்பப்படும் சாஜன் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம், படத்தொகுப்பு ஆகியவற்றை கவனிக்கிறார். வேணு ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். சிறந்த படங்களை மலையாள ரசிகர்களுக்கு கொடுத்த ஏ.கே.சாஜன் மற்றும் வேணுவிடம் இருந்து ஒரு பிரமாண்டமான படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Aishwarya Rajesh Pulimada Movie Poster is Out Now

புலிமடா: ஜோஜு ஜார்ஜ் நடித்த இரட்டா படத்தின் இரண்டாம் பாகமாக புலிமடா உருவாகியிருக்கிறது. புலிமடா படத்தை ஐன்ஸ்டீன் சாக் பால், ராஜேஷ் தாமோதரன் ஆகியோர் லான்ட் சினிமாஸ் மற்றும் ஐன்ஸ்டீன் மீடியா மூலம் தயாரித்திருக்கின்றனர். ஐஸ்வர்யா ராஜேஷ் தவிர்த்து செம்பன் வினோத், லிஜோ மோல் , ஜாபர் இடுக்கி, ஜியோ பேபி, பாலச்சந்திர மேனன், ஜானி ஆண்டனி, கிருஷ்ண பிரபா, சோனா நாயர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இஷான் தேவ் இசையமைக்க, பின்னணி இசையை அனில் ஜான்சன் செய்துள்ளார்.

போஸ்டர்: இந்நிலையில் புலிமடா படத்தின் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. போஸ்டருக்கு கீழே செண்ட் ஆஃப் ஏ உமன் (Scent Of A Woman)அதாவது பெண் வாசனை என்ற டேக் லைனும் இடம் பெற்றுள்ளது. எனவே இந்தப் படமானது ஹீரோயினை மையப்படுத்திய கதையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. போஸ்டருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X