இந்தியன் 2 வில் இருந்து விலகிய ஐஸ்வர்யா ராஜேஷ் - கால்ஷீட் நெருக்கடியாம்

சென்னை: இந்தியன் 2 படத்தில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ன்னுடைய கால்ஷீட் தேதிகளை வீணடித்து வருவதால் மற்ற படங்களில் நடிப்பதற்கு தடங்கல் ஏற்படும் என்பதை அறிந்து ஐஸ்வர்யா ராஜேஷ் விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தின் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டு இருக்கும் வேளையில், ஐஸ்வர்யா ராஜேஸ் படு டென்ஷனாக இருப்பதாக தெரிகிறது.

தனது கால்ஷீட்டை தொடர்ந்து வீணடித்து வருவதால் கமல், ஷங்கர் கூட்டணியின் இந்தியன் 2 படத்தை விட்டு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியேற உள்ளதாகவும், தயாரிப்பு நிறுவனம் அவரை பெரும்பாடுபட்டு சமாதானப்படுத்த முயல்வதாகவும் தகவல்கள் வருகின்றன.

ஐஸ்வர்யா ராஜேஸ்

ஐஸ்வர்யா ராஜேஸ்

கால்ஷீட் அடிப்படையில் பல படங்களில் வேலை செய்யும் ஐஸ்வர்யா ராஜேஷ் எப்படியாவது இந்தியன் 2 படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இந்தியன் 2 என்ற தலைப்பில் உருவாகிறது.

இந்தியன் 2

இந்தியன் 2

ஆரம்பத்தில் சில பல சிக்கல்களை எதிர்கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடிக்க, சித்தார்த், பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், யோகி பாபு, நெடுமுடி வேணு, விவேக், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

ஆந்திராவில் படப்பிடிப்பு

ஆந்திராவில் படப்பிடிப்பு

இவர்கள் அனைவரும் பல சிறிய படங்களின் கல்ஷீட் தேதிகளை விட்டுவிட்டு இங்கு வந்து உள்ளனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் நடைபெற்று வரும் நிலையில், கமல்ஹாசன் இன்னும் இரண்டு தினங்களில் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஸ் விலகல்

ஐஸ்வர்யா ராஜேஸ் விலகல்

இந்த நிலையில், இப்படத்தில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கால்ஷீட் நெருக்கடி காரணமாக ஐஸ்வர்யா ராஜேஷ் விலகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தியன் 2 படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை, இயக்குநர் ஷங்கர் மொத்தமாக பல மாத கால்ஷீட் கேட்டு வருவதாக நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

கால்ஷீட் பிரச்சினை

கால்ஷீட் பிரச்சினை

இதே பிரச்சினையால் தான் ஆர்.ஜே.பாலாஜியும் இந்தியன் 2வில் நடிக்க மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ விரைவில் குழப்பங்கள் தீரும் என்ற நம்பிக்கையில் அனைவரும் இருந்தனர். ஆனால், தற்போது அதே கால்ஷீட் பிரச்சனையால் தான் ஐஸ்வர்யா ராஜேஷும் படத்தில் இருந்து விலகியுள்ளார்.

வரிசை கட்டும் படங்கள்

வரிசை கட்டும் படங்கள்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் மெய் படம் இன்று வெளியாகிறது. மேலும், நம்ம வீட்டுப் பிள்ளை, கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி, க/பெ.ரணசிங்கம், வானம் கொட்டட்டும், கருப்பர் நகரம் ஆகிய படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஸ் முடிவு

ஐஸ்வர்யா ராஜேஸ் முடிவு

ஒரு படத்துக்காக மற்ற படங்களுக்கு கால்ஷீட் சொதப்பி கெட்ட பெயர் வாங்க வேண்டாம் என்ற எண்ணத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. டைம் கீப் அப் மற்றும் டைம் மேனேஜ்மென்ட் என்பது ஒவ்வொருவது வாழ்க்கையிலும் மிக மிக அவசியம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X