எனது அடுத்த ஜோடி இவர் தான்...உண்மையை வெளியிட்ட விஷ்ணு விஷால்

சென்னை : விஷ்ணு விஷால், மனு ஆனந்த் இயக்கத்தில் தான் நடித்து வெளிவர இருக்கும் எப்ஐஆர் படத்தை முடித்த கையோடு அடுத்த படத்தில் இறங்கி விட்டார்.

இவர் அடுத்தபடியாக நடிக்கும் படம் மோகன்தாஸ். இந்த படம் பற்றி 2020 துவக்கத்திலேயே அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக படத்தின் வேலைகள் நிறுத்தப்பட்டன.

பயங்கர திரில்லர் படமான மோகன்தாசை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தான் தயாரிக்கிறது. முரளி கார்த்திக் இப்படத்தை டைரக்ட் செய்ய உள்ளார். இதற்கு முன் இவர் ஓடிடி தளத்திற்காக களவு என்ற படத்தை இயக்கி உள்ளார்.

லேட்டஸ்ட் தகவல் :

லேட்டஸ்ட் தகவல் :

இப்போது லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு கே.எஸ்.சந்தரமூர்த்தி இசை அமைக்கிறார். விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

தரமான நடிகை இவர் தான் :

தரமான நடிகை இவர் தான் :

தரமான நடிகையான ஐஸ்வர்யாவை இப்படத்தில் நடிக்க வரவேற்பதாக விஷ்ணு விஷால் ஸ்டூடியோசின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஐஸ்வர்யா ராஜேசை பாராட்டி விஷ்ணு விஷாலும் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

வாங்க ஐஸ்வர்யா...நான் உங்க ஃபேன் :

வாங்க ஐஸ்வர்யா...நான் உங்க ஃபேன் :

அதில், நான் உங்களின் வேலைக்கு மிகப் பெரிய ரசிகன். நீங்கள் எப்போதும் என்னுடைய நல்ல தோழி. இப்போது மோகன்தாசில் இருவரும் இணைந்து பணியாற்ற உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

அதிர வைத்த டீசர்

அதிர வைத்த டீசர்

2020 ஏப்ரல் மாதத்தின் துவக்கத்தில் இப்படத்தின் பெயரும், டீசரும் வெளியிடப்பட்டது. இதில் சுத்தியலால் விஷ்ணு விஷால் ஒருவரை அடித்து கொலை செய்வது போலவும், பிறகு ரத்தம் சொட்டும் சுத்தியலுடன் படிக்கட்டில் நடந்து சென்று, ரத்தக்கறை படிந்த டி ஷர்ட்டை வாஷிங்மெஷனில் போட்டு துவைக்க செய்த விட்டு, தரையில் அமர்ந்து உணர்ச்சிகரமாக அழுவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X