பிறந்தநாள் காணும் தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி.. ஐஸ்வர்யா ராஜேஷின் புது அப்டேட்

சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் தயாரிப்பாளர்களில் ஒருவராக எஸ் பி சௌத்ரி இருந்து வருகிறார்.

படங்களை தயாரிப்பது மட்டுமன்றி குழந்தை நல மருத்துவராக பல விதமான சேவைகளை செய்து வருகிறார்
எஸ் பி சௌத்ரி.

இன்று ஜூலை 15 பிறந்தநாள் காணும் தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி-க்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

A1, டகால்டி போன்ற வெற்றி படங்களை தயாரித்தவர் எஸ் பி சௌத்ரி. இரண்டு படங்களுமே நகைச்சுவையான படங்களாகும். கமர்ஷியல் ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற படங்களாகும்.

டிரைவர் ஜமுனா

டிரைவர் ஜமுனா

தற்போது இவர்,தனது 18ரீல்ஸ் நிறுவனம் சார்பாக,நடிப்பு அரக்கி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் "டிரைவர் ஜமுனா" படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில், பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.பல ஸ்ஷ்டுயூல்ஸ் ஷூட்டிங் முடிந்த நிலையில் இன்னும் ஒரு ஸ்ஷ்டுயூல் மட்டுமே பாக்கி உள்ளது . தீபாவளிக்கு பிறகு ரீலீஸ் செய்ய திட்டம் செய்து வருகின்றனர் பட குழுவினர் . ஐஸ்வர்யா ராஜேஷ் பல வித்தியாசமான கதைகளை தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் பெண்களின் பல சொல்லப்படாத பிரச்சனைகளை மிகவும் தைரியமாக சொல்லும் படமாக இந்த "டிரைவர் ஜமுனா "இருக்கும் என்று பல நண்பர்களிடம் சொல்லி வருகிறார் . எஸ் பி சௌத்ரியுடன் இணைந்து நல்ல படைப்பில் வேலை செய்வது மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் உள்ளது என்று பிறந்தநாளை வாழ்த்தை சொல்லி உள்ளார் .

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

நிஜ வாழ்வில் குழந்தை நல மருத்துவராக சேவைகளை செய்து வரும் எஸ் பி சௌத்ரி, தயாரிப்பாளராக தன்னுடைய கலை பயணத்தை தொடங்கி சிறப்பாக அதிலும் பணியாற்றி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.சினிமாவுக்கு அப்பாற்பட்டு நல்ல மனிதர் என்று கொங்கு மண்டலம் முதல் சென்னை மக்கள் பலரின் மனதில் நீங்கா இடம் பிடித்து காட்டி உள்ளார் .

குவியும் வாழ்த்து

குவியும் வாழ்த்து

எஸ் பி சௌத்ரி பல வெற்றி படங்களை கொடுக்க வேண்டும் என்றும், நீடூழி வாழ வேண்டும் என்றும் திரை பிரபலங்கள் இயக்குனர் சசிகுமார், நடிகர் சந்தானம், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகிபாபு, ஆகியோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர்கள் மட்டுமன்றி ஆடுகளம் நரேன், லொள்ளு சபா மாறன், சுவாமி நாதன், தங்கதுரை, மனோகர், இயக்குனர் ராம் பாலா, தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி, அம்மா கிரியேசன்ஸ் சிவா, பெப்சி சிவா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

காமராஜர் முன்னுதாரணமாக

காமராஜர் முன்னுதாரணமாக

எஸ் பி சௌத்ரி பிறந்த நாளான இன்று பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளாக இருப்பதினால் அவரை போலே பல நல்ல காரியங்களை , உதவிகளை பல எழியோருக்கு தொடர்ந்து செய்து வருகிறார் எஸ் பி சௌத்ரி. குறிப்பாக பலருக்கு மருத்துவ உதவி , கல்வி உதவி என்று மிகவும் சைலண்ட்டாக எந்த வித விளம்பரமும் இல்லாமல் இவர் செய்வது மிகவும் பாராட்டத்தக்கது . வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரிய கூடாது என்பது போலே இவரிடம் உதவி பெற்ற பலர் இவரை பற்றி சினிமா வட்டாரங்களில் மிகவும் பெருமையாக பேசி வருகின்றனர் . 1979 ஜூலை 15ஆம் பிறந்த இவர் ஒவ்வொவொரு ஆண்டும் காமராஜர் வழி நடத்திய பல நல்ல விஷங்களை இவரும் பின்பற்றி சமூகத்திற்கு நற்பணிகள் செய்து வருகிறார் .

மருத்துவம் மற்றும் கலைத்துறை

மருத்துவம் மற்றும் கலைத்துறை

முன்னணி தயாரிப்பாளர் என்று மட்டும் இல்லாமல் ஈரோடு மாவட்டத்தில் பிரபல குழந்தைகள் நல மருத்துவருமான எஸ் பி சௌத்ரிக்கு பிறந்தநாள் சொல்ல பல குழந்தைகளின் பெற்றோர்கள் வாழ்த்தி வருகின்றனர் .இன்னொரு பக்கம் பிஞ்சு குழந்தைகளின் செல்லமான வாழ்த்தையும் மிகவும் அற்புதமாக பெற்று இறைவன் அருள் நிறைய கிடைத்த சந்தோஷத்தில் புது உத்வேகத்துடன் நிறைய திரைப்படங்கள் தயாரிக்க தயாராகி வருகிறார் எஸ் பி சௌத்ரி. சினிமா டாக்டராக பல புதிய கதைகளை ஆப்ரேஷன் செய்து கொண்டு தான் இருக்கிறார். நல்ல சினிமா ரசிகனாக , நல்ல ஸ்க்ரிப்ட்ஸ் செலக்ட் செய்கிறார். ஒரு டாக்டர் ஆக இருந்து சினிமாவிற்குள் வந்தவர், பல கலைஞர்களுக்கு வாழ்க்கை கொடுத்துள்ளார் என்று யோகி பாபுவும் மிகவும் மனம் நெகிழ பலரிடம் கூறியுள்ளார். முருக பெருமான் உங்கள் முயற்சிகளை எப்போதும் உடன் இருந்து நடத்துவார் என்று யோகி பாபு சொன்னது இன்னமும் பலருக்கு நினைவு இருக்கிறது . மருத்துவம் மற்றும் கலைத்துறை என்று சாதித்து வரும் இவரை பலரும் வாழ்த்தி வருகின்றனர் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X