ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ள ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்தப்படம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்தப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
தமிழ் சினிமாவில் அரங்கேறும் சுவாரசிய சம்பவங்கள் குறித்த தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில், ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்தப்படமான பூமிகா திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளதாக பரவும் தகவல் குறித்த தகவல்களை கூறியுள்ளார் பிகே.

மேலும் ரோஹித் ஷெட்டியின் அடுத்த படமான சர்க்கஸ் படம் குறித்த தகவல்கைளையும் கூறியிருக்கிறார் பிகே. இந்த படத்தில் ரன்பீர் சிங் நடிக்கவுள்ளார். இந்தப் படம் 1982ல் வந்த அங்குர் என்ற படத்தின் ரீமேக்தான் இது என கூறியுள்ளார்.
புத்தம் புது காலை திரைப்படத்தை 5 பேர் சேர்ந்து இயக்கினர். கலவையான விமர்சனங்களைப் பெற்ற வித்தியாசமான படம் இது. வித்தியாசமான கருத்துடன் வெளியான படம் பலரது விமர்சனங்களையும் சம்பாதித்துள்ளது. ஒளிப்பதிவாளர் நட்டி நடராஜ் இந்தப் படத்தை கழுவி கழுவி ஊற்றியுள்ளார் என்றும் கூறியிருக்கிறார் பிகே.
பேய் மாமா படத்தில் வடிவேலுதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அது கை கூடாமல் போகவே, யோகிபாபு கடைசியில் வந்து விட்டார். அப்படத்தின் பர்ஸ்ட் லுக்கே மிரட்டலாக இருக்கிறது. டீசர் அதை விட பயங்கரமாக இருப்பதாக கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











