ஐஸ்வர்யா ராஜேஷின் "திட்டம் இரண்டு" டீசர் அப்டேட்!

சென்னை : கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் மிகச் சிறப்பாக விளங்கி வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

க/பெ ரணசிங்கம் திரைப்படத்தில் இவரின் நடிப்பை பார்த்து பலரும் வியந்து பாராட்டிய நிலையில் அடுத்தடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகள் இவரை தேடி வருகின்றன.

அந்த வகையில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திட்டம் இரண்டு படத்தின் டீசர் அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

தங்கை கதாபாத்திரம்

தங்கை கதாபாத்திரம்

கோலிவுட்டில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை தன்னுடைய பாணியில் மிகச் சிறப்பாக செய்து முடிக்கக்கூடியவர். கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் ஹீரோயின்களில் முதன்மையில் உள்ளவர். நடித்தால் ஹீரோயினாக மட்டும்தான் நடிப்பேன் என அடம் பிடிக்கும் பல ஹீரோயின்களுக்கு மத்தியில் தங்கை கதாபாத்திரம் குணச்சித்திர கதாபாத்திரம் என எது கொடுத்தாலும் இதை மிகச் சிறப்பாக தன்னுடைய பாணியில் செய்து முடிப்பவர்.

தேடி வருகின்றன

தேடி வருகின்றன

அந்த வகையில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த க/பெ ரணசிங்கம் சென்ற ஆண்டு வெளியாகி இவரின் நடிப்பை வியந்து பாராட்டாதவர்களே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். க/பெ ரணசிங்கம் வெற்றி பெற்றதை தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகள் இவரைத் தேடி வருகின்றன.

மிஸ்டரி த்ரில்லர்

மிஸ்டரி த்ரில்லர்

அந்த வகையில் பிரபல குறும்பட இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் திட்டம் இரண்டு என்ற மிஸ்டரி திரில்லர் படத்தில் நடித்துள்ளார். கொரோனா இரண்டாவது அலைக்கு முன்பே படப்பிடிப்பு மொத்தமும் முடிக்கப்பட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சமீபத்தில் மிக்ஸிங் பணிகள் முடிந்து விட்டதாக படக்குழு அறிவித்திருந்தது.

புது போஸ்டரை

புது போஸ்டரை

திட்டம் இரண்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த டீசர் இன்னும் ஓரிரு வாரத்தில் வெளியாக இருப்பதாக புது போஸ்டரை வெளியிட்ட படக்குழு அட்டகாசமான அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் ஒரு மாய பிம்பத்திற்குள் ஐஸ்வர்யா ராஜேஷ் நின்று கொண்டிருக்க எச்சரிக்கை நடுப்புகள் போடப்பட்டுள்ளது. இப்படத்தை தினேஷ் கண்ணன் மற்றும் வினோத் குமார் இணைந்து தயாரித்துள்ளனர். சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X