»   »  சசிகுமாருக்கு தங்கையான ஐஸ்வர்யா ராஜேஷ்!

சசிகுமாருக்கு தங்கையான ஐஸ்வர்யா ராஜேஷ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

காக்காமுட்டை தர்மதுரை படங்களின் மூலம் நடிக்கத்தெரிந்த நடிகை என்று பெயரெடுத்தவர் ஐஸ்வர்யா. பெரிய நடிகர்களுடன் நடிக்க முடியவில்லையே என்று வருத்தத்தில் இருந்த ஐஸ்வர்யாவுக்கு இப்போது சசிகுமாருடன் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. ஜோடியாக அல்ல... தங்கையாக!

சசிகுமாரை வைத்து முத்தையா இயக்கவிருக்கும் கொடிவீரன் படம் அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்ட கதை என்பது தெரியும்.

Aishwarya Rajesh in Sasikumar movie

இதில் ஹீரோவுக்கு சமமான அந்த தங்கை வேடத்தில் நடிக்கத் தான் ஒப்பந்தமாகி இருக்கிறாராம் ஐஸ்வர்யா.

ஒரு பக்கம் விக்ரமுக்கு ஜோடியாக நடிப்பவர் இன்னொரு பக்கம் சசிக்கு தங்கையாக நடிக்கிறார். கதை தான் முக்கியம் என்று ரிஸ்க் எடுப்பதற்காகவே ஐஸை பாராட்டலாம்.

கொடி வீரனில் சசிக்கு ஹன்சிகா ஜோடி என்று சொன்னார்கள். இப்போது படத்தில் பூர்ணாவும் இருக்கிறாராம். பூர்ணாவுக்கு நெகட்டிவ் ரோல் என்கிறார்கள்.

English summary
Aishwarya Rajesh has signed a movie with Sasikumar for the first time and the movie has been titled as Kodi Veeran

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil