அந்த வயசுலயே அவ்வளவு கூச்சம் அவருக்கு.. கட்டிப்பிடினு நான் சொன்னேன்.. ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்

சென்னை: Aishwarya Rajesh (ஐஸ்வர்யா ராஜேஷ்) ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு படப்பிடிப்பின் அனுபவத்தை பகிந்துகொண்டது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

மானாட மயிலாட நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆன பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர்களும் இவர்களும் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அவர் தொடர்ந்து உயர்திரு 420, சட்டப்படி குற்றம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பிறகு பா.இரஞ்சித் இயக்குநராக அறிமுகமான அட்டகத்தி படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

Aishwarya Rajesh Shares Kaakaa Muttai Movie Shooting Experience

முன்னணி நடிகை: அந்தப் படத்துக்கு பிறகு ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், கதை திரைக்கதை வசனம் இயக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். குறிப்பாக மணிகண்டன் இயக்கத்தில் அவர் நடித்த காக்கா முட்டை படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிலும் சினிமாவில் வளர்ந்துகொண்டிருக்கும் சமயத்தில் இரு குழந்தைகளுக்கு தாயாக அவர் நடித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

ஐஸ்வர்யா ராஜேஷ் வருத்தம்: அந்தப் படத்துக்கு பிறகு தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் வரும் என ஐஸ்வர்யா எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதுகுறித்தும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நான் காக்கா முட்டை படத்தில் நடித்த பின்பு மொத்த திரையுலகமும் என்னை தொடர்பு கொண்டு பாராட்டியது. நிறைய பேர் புகழ்ந்தார்கள். ஆனால், அதன் பிறகு எனக்கு எந்த பட வாய்ப்புகள் வரவில்லை என்பதுதான் எனக்கு அதிர்ச்சியாக இருந்தத என்றார்.

முன்னணி நடிகை: அதற்கு பிறகு ஒருவழியாக அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க தர்மதுரை, குற்றமே தண்டனை, லட்சுமி, வடசென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். முக்கியமாக வடசென்னை படம் அவருக்கு பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. தற்போது அவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்துவருகிறார். அப்படி அவர் நடித்த சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா, ஃபர்ஹானா ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகின. இவற்றில் எந்தப் படமும் சொல்லிக்கொள்ளும்படி ஹிட்டாகவில்லை.

ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்: இந்நிலையில் காக்கா முட்டை படத்தின் படப்பிடிப்பு குறித்து அவர் பகிர்ந்திருக்கும் விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்த ஒரு பேட்டியில், "காக்கா முட்டை படத்தின் எமோஷனல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அப்போது எனது இரண்டாவது மகனாக நடித்த இரண்டு பேரும் என்னை கட்டிப்பிடிக்க வேண்டும்.

ஆனால் எனக்கு இரண்டாவது மகனாக நடித்த பையன் என்னை கட்டிப்பிடிக்க மாட்டேன் என்று சொல்லிட்டான். ஏன் என்று கேட்டால் கூச்சமா இருக்கு என்றான். இந்த வயசுல கூச்சப்படுறதுக்கு என்னடா இருக்குனு சொல்லி சமாதானம் செய்தேன். அதன் பிறகுதான் அவன் என்னை கட்டிப்பிடித்தான்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X