வெள்ளையில் சிவப்பு... தேவதையாய் மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்...சிறப்பு
சென்னை : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது புதிய போட்டோஷூட்டை எடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
வெள்ளை நிற உடையில் வலை துப்பட்டாவால் ஆட்டம் காட்டி தன்னை தேவதையாக மாற்றிக் காட்டியுள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தென்னிந்திய மொழிகளில் அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.

சிறப்பான படங்கள்
தொகுப்பாளராக தனது பயணத்தை துவக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக குப்பத்து பெண் கேரக்டரில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி பெயர் வாங்கினார். தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த படங்களும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

இயல்பான நடிப்பு
விக்ரம் உள்ளிட்ட பெரிய நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், மாடர்ன் கேரக்டர்களிலும் தன்னை சிறப்பாக பொருத்திக் கொண்டுள்ளார். இவர் நடித்த கனா மற்றும் எங்க வீட்டுப் பிள்ளை போன்ற படங்கள் நமது பக்கத்து வீட்டுப் பெண் படும் அவஸ்தைகளை கண்முன் கொண்டு வந்தது.

சிறப்பான போட்டோஷுட்கள்
சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாகவே காணப்படுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது அரைடஜன் படங்களில் நடித்துவரும் இவர் அவ்வப்போது சிறப்பான போட்டோஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

தேவதை லுக்
இந்நிலையில் தற்போது இவர் புதிய போட்டோஷுட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் வெள்ளை நிற உடையில் சிவப்பு வலை துப்பட்டாவை பறக்க விட்டு தேவதையாக மிளிர்கிறார். மேலும் டஸ்க்கி மேக்கப்பில் இவரது முகமும் ஜொலிக்கிறது. வித்தியாசமான கோணங்களில் எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படங்களில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











