ரொமான்ஸ் வீடியோவை பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

சென்னை : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விஜய் சேதுபதியுடன் இணைந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை,க/பெ ரணசிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Recommended Video

Aishwarya Rajesh மக்களிடம் வேண்டுகோள் | நம்மையும் நாட்டையும் பாதுகாப்போம்

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வர ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

பழைய பாடல்களை புதிய திரைப்படங்களின் காட்சிகளில் மிக்ஸிங் செய்து பல வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வர அவ்வாறு தர்மதுரை காட்சிகளை நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா பாடலுடன் மிக்ஸிங் செய்துள்ள வீடியோவை ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்துள்ளார்.

விருதுகளை தட்டி

விருதுகளை தட்டி

தமிழ்,மலையாளம்,தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்து இந்திய அளவில் பிரபலமான நடிகையாக உள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். குறிப்பாக இவரது நடிப்பிற்கு பெரும் ரசிகர் பட்டாளமே இருக்க சமீபத்தில் வெளியான க/பெ ரணசிங்கம் இவரது நடிப்பிற்காகவே விருதுகளை தட்டிச் சென்றது.

ஹீரோயினியாக ஐஸ்வர்யா ராஜேஷ்

ஹீரோயினியாக ஐஸ்வர்யா ராஜேஷ்

இதைத்தொடர்ந்து தெலுங்கிலும் பல பட வாய்ப்புகள் ஐஸ்வர்யாவுக்கு குவிந்து வருகிறது. மலையாளத்தில் மெகா ஹிட் வெற்றி பெற்ற ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் மற்றும் ராணா நடிக்க ஹீரோயினியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இது தவிர ரிபப்ளிக் மற்றும் டக் ஜெகதீஸ் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

மிகச் சிறந்த ஜோடி

மிகச் சிறந்த ஜோடி

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் காம்பினேஷனில் வரும் திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று மிகச் சிறந்த ஜோடி என அனைவராலும் பாராட்டப் படுகிறது. ரம்மியில் முதல்முறையாக இணைந்த இந்த ஜோடி அதைத் தொடர்ந்து பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை மற்றும் சமீபத்தில் வெளியான க/பெ ரணசிங்கம் போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு மிக்ஸிங்

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு மிக்ஸிங்

பழைய பாடல்களை புதிய திரைப்படங்களின் காட்சிகளில் மிக்ஸிங் செய்து பல வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வர தர்மதுரையில் விஜய் சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் க்யூட்டான காட்சிகளை கார்த்திக்கின் பொன்னுமணி படத்தில் இடம்பெறும்

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா பாடலுடன் மிக்ஸிங் செய்த வீடியோவை பார்த்த ஐஸ்வர்யா ராஜேஷ் ரசித்ததோடு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இதனை உருவாக்கிய அந்த நபருக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X