twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சென்னையில் உள்ள ஒரு கிரவுண்ட்டையும் விடாமல் விரட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்

    கனா திரைப்படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியுள்ளார்

    |

    Recommended Video

    நடிப்பில் சிக்ஸர் அடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்- வீடியோ

    சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கனா திரைப்படத்திற்கு பிறகே பெண்கள் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்ததாகக் கூறியுள்ளார்.

    நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள கனா திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

    Aishwarya Rajesh speech!

    அப்போது பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இப்படத்தில் நடிப்பதற்கு முன்புவரை பெண்கள் விளையாடும் கிரிகேட் பார்த்ததில்லை எனக் கூறினார்.

    கிரிக்கெட் தொடர்பான படம் என படக்குழுவினர் அனுகியபோது, அது முடியாது என சொல்லிவிட்டாராம் ஐஸ்வர்யா. பிறகு இயக்குனர் அருண்ராஜா காமராஜ் நம்பிக்கையூட்டி ஐஸ்வர்யாவை தேத்தியுள்ளார்.

    முதலில் ஒரு வாரத்திற்கு பௌலிங் பயிற்சி எடுக்கும்போது எவ்வளவு வேகமாக கையை சுழற்றினாலும், காலுக்கு அருகிலேயே பந்து விழுந்ததாம். தவறாக இந்தப் பெண்ணை கூட்டி வந்துவிட்டோமோ என அருண்ராஜா யோசிக்க ஆரம்பித்து விட்டாராம்.

    எதிலும் இறங்கிவிட்டால் ஒரு கை பார்க்காமல் விடக்கூடாது என்ற முடிவோடு இருக்கும் ஐஸ்வர்யா, தன்னால் முடியும் என பயிற்சி எடுத்து பௌலிங்கில் தேர்ச்சி பெற்றுள்ளார். பௌலிங் பயிற்சிக்காக சென்னை முழுவதுமுள்ள எல்லா மைதானங்களிலும், வலைப்பயிற்சி எடுத்தாராம்.

    கனா திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் கனவோடு வாழும் கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார். அவரின் கனவை நினைவாக்க போராடும் பாசமிகு தந்தையாக சத்தியராஜ் நடித்துள்ளார்.

    English summary
    Actress Aishwarya Rajesh did her net practice in Chennai grounds before Kanaa movie shot.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X