க/பெ ரணசிங்கம் படத்தின் ப்ரமோஷனுக்காக ஐஸ்வர்யா ராஜேஷ் செய்த காரியத்தை நீங்களே பாருங்க!

சென்னை : விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்திருக்கும் க/பெ ரணசிங்கம் திரைப்படம் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

அதிரடியான அரசியல் வசனங்கள் சமூகப் பிரச்சினைகள் என தெறிக்கும் வசனங்களுடன் வெளியாக இருக்கும் க/பெ ரணசிங்கம் திரைப்படத்தின் முன்னோட்டம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தது.

இந்நிலையில் இந்தத் திரைப் படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ் அட்டகாசமான உடையில் முன்னழகு கவர்ச்சியை காட்டியவாறு வெளியிட்டுள்ள சூடான புகைப்படங்கள் இணையத்தில் பற்றி எரிந்து வருகிறது.

மிகப் பெரிய நடிகையாக

மிகப் பெரிய நடிகையாக

எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் தயங்காமல் அதில் முழு ஈடுபாட்டுடன் நடித்து இன்று மிகப் பெரிய நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

அம்மா கதாபாத்திரத்தில்

அம்மா கதாபாத்திரத்தில்

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய "அட்டகத்தி" திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர் அதைத்தொடர்ந்து தேசிய விருது பெற்ற "காக்கா முட்டை " திரைப்படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்ததற்காக பல்வேறு பாராட்டுகளை பெற்றதோடு முன்னணி நடிகையாக முன்னேறினார்.

க/பெ ரணசிங்கம்

க/பெ ரணசிங்கம்

விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், விஜய் தேவரகொண்டா என முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து தன்னை ஒரு சிறந்த கதாநாயகியாக நிரூபித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்கனவே தர்மதுரை திரைப்படத்தில் விஜய் சேதுபதி உடன் இணைந்து நடித்திருந்த நிலையில் இப்பொழுது மீண்டும் க/பெ ரணசிங்கம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

நேரடியாக ஓடிடி தளத்தில்

நேரடியாக ஓடிடி தளத்தில்

சில வாரங்களுக்கு முன்பு க/பெ ரணசிங்கம் திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நிலையில் இந்தத் திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்படுகிறது.

பெரும் எதிர்பார்ப்பை

பெரும் எதிர்பார்ப்பை

அனல் பறக்கும் அரசியல் வசனங்கள், சமூகப் பிரச்சனைகளை ஆணித்தனமாக பேசும் கதாபாத்திரங்கள் என பல்வேறு காட்சிகளில் விஜய் சேதுபதியும், ஐஸ்வர்யா ராஜேஷும் மிரட்டி இருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், பலரும் திரையில் கண்டுகளிக்க ஆவலுடன் காத்திருக்க இந்த படக்குழு இப்பொழுது நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட உறுதி செய்துள்ளது.

அட்டகாசமான முன்னழகை

அட்டகாசமான முன்னழகை

அக்டோபர் 2க்கு இன்னும் ஓரிரு நாட்களிலே இருக்கின்ற நிலையில் ப்ரமோஷன் வேலைகளில் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளது க/பெ ரணசிங்கம் படக்குழு. அவ்வாறு ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ் தனது அட்டகாசமான முன்னழகை காட்டியவாறு ரம்மியமான உடையில் பாக்கவே பற்றிக்கொள்ளும் அழகுடன் வெளியிட்டுள்ள பல்வேறு சூடான புகைப்படங்கள் இணையத்தில் பற்றி எரிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X