Aishwarya Rajesh - ராஷ்மிகாவைவிட அதற்கு நான்தான் பொருத்தம்.. பஞ்சாயத்தை ஆரம்பித்த தமிழ் நடிகை

சென்னை: Aishwarya Rajesh (ஐஸ்வர்யா ராஜேஷ்) நடிகை ராஷ்மிகா மந்தனாவைவிட புஷ்பா படத்தில் நடிப்பதற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்திருக்கிறார். இளம் நடிகையாக இருந்தாலும் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து அதில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி தன்னை பக்குவமான கலைஞராக மாற்றியிருக்கிறார். அவரது நடிப்புக்கு உதாரணமாக காக்கா முட்டை படத்தை சொல்லலாம். அந்தப் படம் வெளியானபோதெல்லாம் ஐஸ்வர்யா ராஜேஷ் இண்டஸ்ட்ரிக்குள் நுழைந்த புதிது. அப்படிப்பட்ட சமயத்தில் எந்த ஹீரோயினும் இரண்டு மகன்களுக்கு தாயாக நடிக்க யோசிப்பார். ஆனால் ஐஸ்வர்யா அப்படி இல்லை.

Aishwarya Rajesh talks about Pushpa movie and rashmika mandanna

ஃபர்ஹானா: தொடர்ந்து சிறப்பான கதையம்சம் உள்ள படங்களில் நடித்துவரும் ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் நடித்த படம்தான் ஃபர்ஹானா. ஒருநாள் கூத்து, மான்ஸ்டர் ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்த நெல்சன் வெங்கடேசன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இஸ்லாமிய கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுடன் ஜித்தன் ரமேஷ், இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

சர்ச்சையில் ஃபர்ஹானா: படத்தின் ட்ரெய்லரை பார்த்ததிலிருந்து இஸ்லாமியர்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பை பதிவு செய்தனர். இருப்பினும் பல சர்ச்சைக்கு மத்தியில் கடந்த வெள்ளிக்கிழமை படம் வெளியானது. படம் நல்ல ரெஸ்பான்ஸையே பெற்றிருக்கிறது. இருந்தாலும் பட ரிலீஸுக்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷின் வீடு, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் வீடு உள்ளிட்டவைகளுக்கு காவல் துறையினர் பாதுகபாப்பு அளித்திருந்தனர். இதுவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Aishwarya Rajesh talks about Pushpa movie and rashmika mandanna

ஐஸ்வர்யா பேட்டி: இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்த சமீபத்திய பேட்டியில், "தெலுங்கு திரையுலகம் என்றால் எனக்கு ரொம்பவே பிடிக்கும். கம்பேக் கொடுப்பதற்கு எனக்கு ஒரு நல்ல படம் அமைய வேண்டும். விஜய் தேவரகொண்டாவுடன் நான் நடித்த ஏர்ல்டு பேமஸ் லவ்வர் ம்ப எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அது எனக்கு ஏமாற்றமாகவே அமைந்தது.

மீண்டும் தெலுங்கில்: நல்ல கதாபாத்திரங்கள் நடித்தால் மீண்டும் தெலுங்கில் நடிக்க தயாராக இருக்கிறேன். புஷ்பா படத்தில் ராஷ்மிகாவின் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் எனக்கு ரொம்பவே பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். ரஷ்மிகா மந்தனா அந்தக் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். ஆனால் நான் இன்னும் அந்தக் கதாபாத்திரத்திற்கு மிக சிறப்பாகவே பொருந்தியிருப்பேன்" என்றார்.

புஷ்பா 2: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியானது புஷ்பா. மெகா ஹிட்டான் அந்த படத்தில் ராஷ்மிகா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். குறிப்பாக பாடலுக்கு அவர் நடனம் ஆடியது ட்ரெண்டானது. இப்போது உருவாகிவரும் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும் ராஷ்மிகா நடித்துவருகிறார். முதல் பாகம் போலவே இரண்டாம் பாகத்திலும் ராஷ்மிகாவின் நடன மூவ்மெண்ட் ஏதேனும் ட்ரெண்டிங்கில் வருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X