தெலுங்கில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்: ஹீரோ விஜய் தேவரகொண்டா

Recommended Video

தெலுங்கில் ஹீரோ விஜயுடன் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்... வீடியோ

சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ் விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்க உள்ளார்.

நடிப்புக்கான களம் உள்ள கதைகளைத் தேடி நடித்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் இவர் நடித்திருந்த செக்கச் சிவந்த வானம் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

Aishwarya Rajesh telugu debut

அடுத்ததாக ரிலீஸாக உள்ள வட சென்னை திரைப்படத்திலும் இவர் ஏற்றுள்ள பத்மா கதாபாத்திரம் நிச்சயம் கொண்டாடப்படும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், முதல் முறையாக தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஐஸ்வர்யா. அர்ஜுன் ரெட்டி மூலம் புகழ்பெற்ற நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் நோட்டா திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அடுத்ததாக கிராந்தி மாதவ் இயக்கும் படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க உள்ளார். இப்படத்தில் ராஷி கண்ணா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்கிறார்.

இப்படத்தைப் பற்றி கூறும் போது, தெலுங்கில் நிறைய வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் சரியான கதைக்காக காத்திருந்தேன். அது இப்போது நடந்துள்ளது. இப்படத்தின் ஸ்க்ரிப்டை கேட்டதும் அழகாக இருந்தது.

வழக்கத்திற்கு மாறான ஒரு கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். என்னுடையது மிக ஸ்ட்ராங்கான கதாபாத்திரம் எனத் தெரிவித்துள்ளார். மேலும், இம்மாத இறுதியில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாகவும், ஜனவரியில் ஐஸ்வர்யா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X