தனுசுக்கும் வெற்றிமாறனுக்கும் நன்றி.. 6 ஆண்டுகளை கடந்த காக்கா முட்டை.. ஐஸ்வர்யா ராஜேஷ் ட்வீட்!

சென்னை: காக்கா முட்டை படம் வெளியாகி 6 ஆண்டுகளை கடந்த நிலையில், அந்த படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் உருவான இந்த படத்தை தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்து இருந்தனர்.

இந்நிலையில், நடிகர் தனுஷ், இயக்குநர் வெற்றிமாறன், காக்கா முட்டை இயக்குநர் மணிகண்டன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் நன்றி தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார்.

தங்க முட்டை

தங்க முட்டை

இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் 2015ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி வெளியான படம் காக்கா முட்டை. சாமானிய சென்னைவாசிகளின் வாழ்க்கையை மிகைப்படுத்துதல் இன்றி அழகான முறையில் இயக்குநர் காட்டியிருப்பார். தேசிய விருதுகளை குவித்த இந்த படம் தமிழ் சினிமாவின் தங்க முட்டையாகவே பார்க்கப்படுகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ்

காக்கா முட்டை, வடசென்னை, கனா, க/பெ. ரணசிங்கம் என தான் நடிக்கும் அத்தனை படங்களிலும் தனது தனி முத்திரையை பதித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த அத்தனைக்கும் ஆரம்ப புள்ளியாக இருந்தது காக்கா முட்டை படத்தில் அவர் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தது தான்.

தனுஷ் படத்தில் சிம்பு

தனுஷ் படத்தில் சிம்பு

தனுஷ் தயாரிப்பில் வெளியான இந்த படத்தில் கடைசியாக வரும் பீட்ஸா கடை திறப்பு காட்சியில் நடிகர் தனுஷே நடித்து இருக்கலாம். ஆனால், அதற்கு பதிலாக நடிகர் சிம்பு அந்த காட்சியில் நடித்து இருந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. மராத்தியில் இந்த படம் ஹாஃப் டிக்கெட் என்கிற பெயரில் மறு உருவாக்கம் செய்யப்பட்டது.

ஐஸ்வர்யா ராஜேஷ் நன்றி

ஐஸ்வர்யா ராஜேஷ் நன்றி

காக்கா முட்டை படம் வெளியாகி 6 ஆண்டுகள் கடந்ததை கொண்டாடும் விதமாக அந்த படம் உருவாக காரணமாக இருந்த இயக்குநர் மணிகண்டன், இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நன்றி கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X