நாங்களும் பண்ணுவோம்...ஹீரோக்களுக்கு போட்டியாக ஐஸ்வர்யா ராஜேஷ்

சென்னை : வத்திக்குச்சி படத்தை இயக்கிய டைரக்டர் கின்ஸ்லின் இயக்கும் டிரைவர் ஜமுனா என்ற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இந்த படத்தின் சூட்டிங், பூஜையுடன் துவங்கி உள்ளது.

கிரைம் த்ரில்லர் படமான இதில், கால்டாக்சி டிரைவராக ஐஸ்வர்யா நடிக்கிறார். இந்த படம் பற்றி டைரக்டர் கூறுகையில், டிரைவரை முன்னிலைப்படுத்திய படங்கள் அதிகம் எடுக்கப்படுவதில்லை. அதிலும் பெண் டிரைவரை பற்றி எடுக்கப்படுவதில்லை.

பெண் டிரைவர்கள் பற்றிய படங்கள் வருவதற்கு இது ஆரம்பமாக இருக்கும். பெண் டிரைவர்களின் வாழ்க்கையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுவதாக இருக்கும் என்றார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னையை சுற்றி எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹோம்ஒர்க் செய்த ஐஸ்வர்யா

ஹோம்ஒர்க் செய்த ஐஸ்வர்யா

இந்த படத்திற்காக ஐஸ்வர்யா எடுத்துக் கொண்ட முயற்சி பற்றி கின்ஸ்லின் கூறுகையில், தனது கேரக்டருக்காக பல பெண் டிரைவர்களை ஐஸ்வர்யா சந்தித்தார். படப்பிடிப்பிற்கு வருவதற்கு முன் ஹோம்ஒர்க் செய்கிறார்.

கார் சேஸிங் காட்சிகள்

கார் சேஸிங் காட்சிகள்

இந்த படத்தில் ஐஸ்வர்யாவிற்கு பல கார் சேஸிங் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. வாழ்க்கை எப்படி கணிக்க முடியாததோ அதே போன்ற பல திருப்பங்களும், சுவாரஸ்யங்களும் நிறைந்த படம் இது. இந்த படத்திற்காக ஒர்க் அவுட் செய்து, உடலை ஃபிட் ஆக்கி உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ் என்றார்.

 டிரைவிங்குடன் ஆக்டிங்

டிரைவிங்குடன் ஆக்டிங்

அசுரன் படத்திற்கு எடிட்டிங் செய்த ராமர் தான் இந்த படத்திற்கும் எடிட்டிங் செய்ய உள்ளார். சண்டை பயிற்சிகளை அனல் அரசு வழங்க உள்ளார். இந்த படத்தில் கார் ஓட்டிக் கொண்டே நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். பின்னி எடுத்துள்ளார் என்கிறார் டைரக்டர்.

 3 மொழிகளில் தயாராகும் படம்

3 மொழிகளில் தயாராகும் படம்

தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் இந்த படம் தயாராகி வருகிறது. ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தெலுங்கிலும் ரசிகர்கள் உள்ளதால் தெலுங்கிலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஜிப்ரன் இசையமைக்க உள்ளார்.

More from Filmibeat

Read more about: aishwarya rajesh driver jamuna
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X