சூப்பர்ஹிட் ரீமேக் படத்தில் நடிக்கிறாரா ஐஸ்வர்யா ராஜேஷ்
சென்னை : ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, சேட்டை, வந்தான் வென்றான், பூமராங் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் புகழ்பெற்றவர் டைரக்டர் கண்ணன். இவர் கடைசியாக சந்தானத்தை வைத்து பிஸ்கோத் என்ற காமெடி படத்தை இயக்கினார்.

தற்போது அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் தள்ளிப் போகாதே படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்த பிறகு சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளார்.
சமீபத்தில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட கண்ணன், காரைக்குடியில் மார்ச் மாதத்தில் படத்தின் சூட்டிங்கை துவக்க உள்ளதாகவும், இப்படத்தில் நடிக்க நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வருவதாகவும் கூறி இருந்தார்.
இதில் லேட்டஸ்ட் தகவலாக திறமையான நடிகை என பெயர் வாங்கிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் நடிக்க உள்ளார். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications











