ரசிகர்களுக்கு Cool Dude சொன்ன ஐஸ்வர்யா ராஜேஷ்: டிரைவர் ஜமுனா படத்தோட ஸ்பெஷல் அப்டேட் தான் அது!
சென்னை: முன்னணி நடிகையாக வலம்வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
அதன்படி, கின்ஸ்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'டிரைவர் ஜமுனா' படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இத்திரைப்படம் விரைவில். வெளியாகவுள்ள நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் சூப்பர் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

கை கொடுத்த காக்கா முட்டை
தமிழ் சினிமாவிற்காக மும்பையில் இருந்து இறக்குமதியாகும் நடிகைகளுக்கு மத்தியில், ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ்ப் பொண்ணாகவே அறிமுகமானார். 'ரம்மி', 'பண்ணையாரும் பத்மினியும்' போன்ற சில படங்களில் நடித்திருந்தாலும், 'காக்கா முட்டை' படத்தில் நடித்த பிறகே, ஐஸ்வர்யா ராஜேஷ் பலராலும் கவனிக்கப்பட்டார். இரண்டு சிறுவர்களுக்கு அம்மா பாத்திரம் என்றபோதும், அழுத்தமான நடிப்பால் கோலிவுட்டில் தனக்கென தனி இடம் பிடித்தார்.

முன்னணி நடிகையாக கலக்கல்
ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி ஹீரோக்களுடனும், பெரிய பட்ஜெட் படங்களிலும் அதிகம் நடிக்காவிட்டாலும், கிடைத்த வாய்ப்புகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். செக்கச் சிவந்த வானம், கனா, வானம் கொட்டட்டும், திட்டம் இரண்டு, பூமிகா போன்ற படங்கள், ஐஸ்வர்யா ராஜேஷின் கேரியரில் சிறந்த படங்களாக அமைந்தன.

எதிர்பார்ப்பில் டிரைவர் ஜமுனா
மலையாளத்தில் வெற்றி பெற்ற 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வரும் ஐஸ்வர்யா, ராஜேஷ், 'டிரைவர் ஜமுனா' படத்திலும் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களுமே நாயகிக்கு முக்கியத்துவமான படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஏற்கனவே 'டிரைவர் ஜமுனா' படத்தின் ட்ரெய்லர் ரிலீஸாகி, படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

டிரைவர் ஜமுனா அசத்தல் அப்டேட்
'வத்திக்குச்சி' படம் மூலம் கவனம் ஈர்த்த கின்ஸ்லி இயக்கத்தில் உருவாகும் 'டிரைவர் ஜமுனா' படத்திற்கு, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, 'ஆடுகளம்' நரேன், கவிதா பாரதி, ஸ்டாண்ட் அப் காமெடியன் அபிஷேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

வெளியாகிறது Cool Dude
ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்பாடல், 'டிரைவர் ஜமுனா' படத்தின் ப்ரோமோ சாங் எனவும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது டிவீட்டரில் தெரிவித்துள்ளார். ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள 'Cool Dude' என்ற இப்பாடலை, அ.ப. ராசா எழுதியுள்ளார். 'குக் வித் கோமாளி' அஸ்வினுக்கு கலக்கல் ஹிட் கொடுத்த 'குட்டி பட்டாசு', 'பேபி நீ சுகர்' உள்ளிட்ட சில பாடல்களை எழுதியுள்ளார்.


Click it and Unblock the Notifications











