திருவண்ணாமலையில் சைக்கிளிங் செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. செம ஸ்டில்.. அப்போ ஷூட்டிங் இல்லையா?
சென்னை: மகா சிவராத்திரிக்கு திருவண்ணாமலைக்கு சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தொடர்ந்து அங்கே இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், திருவண்ணாமலையில் சைக்கிளிங் செய்யும் புகைப்படம் ஒன்றை லேட்டஸ்ட்டாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.
நடிகர் தனுஷை பிரிந்த நிலையில், இயக்கத்தில் ஆர்வம் செலுத்தி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
அப்பா ரஜினிகாந்த், நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவாகி வரும் லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார்.

திருவண்ணாமலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில், திருவண்ணாமலைக்கு சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பகக்த்தில் பதிவிட்டு வருகிறார். அந்த புகைப்படங்களுக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் லைக் மற்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

சைக்கிளில் கிரிவலம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீப காலமாக உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஜிம்மில் வொர்க்கவுட் செய்யும் பல புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர், தற்போது திருவண்ணாமலையில் அதிகாலையில், சைக்கிளிங் செய்யும் அழகிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஷூட்டிங்கே அங்கு தான்
தொடர்ந்து திருவண்ணாமலையிலேயே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருக்கும் போட்டோக்களை பதிவிட்டு வரும் நிலையில், அப்போ லால் சலாம் படத்தின் ஷூட்டிங் எப்போ என ரசிகர்கள் கேட்டு வரும் நிலையில், லால் சலாம் படத்தின் ஷூட்டிங்கையே திருவண்ணாமலையில் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடத்தி வருகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

மங்களூருவில் ரஜினி
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு மங்களூருவில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கூடிய விரைவில் ஜெயிலர் படத்தை முடித்து விட்டு மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் லால் சலாம் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

வெளியேறினாரா விஷ்ணு விஷால்
நடிகர் விஷ்ணு விஷால் லால் சலாம் படத்தில் இருந்து வெளியேறி விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மும்பையில் நடைபெற்று வரும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டிகளில் நடிகர் ஜீவா உள்ளிட்ட பிரபலங்களுடன் இருக்கும் புகைப்படங்களை விஷ்ணு விஷால் ஷேர் செய்துள்ளார். ஆனால், இதுவரை விஷ்ணு விஷால் லால் சலாம் படத்தில் இருந்து வெளியேறியதாக எந்த வொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











