எவ்ளோ நகை தொலைஞ்சிச்சின்னே ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு தெரியல.. கிரைம் பத்திரிகையாளர் செல்வராஜ் பேட்டி!

சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் வேலை பார்த்து வந்த ஈஸ்வரி கடந்த 2 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக பல சவரன் நகைகளை கொள்ளையடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

60 சவரன் நகை கொள்ளையடித்தார் ஈஸ்வரி என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகார் கொடுத்துள்ள நிலையில், ஈஸ்வரியின் வீட்டில் சோதனை செய்த போலீஸார் 100 சவரன் நகைக்கு மேல் கைப்பற்றி உள்ளனர்.

மேலும், வைர நகைகள், சோழிங்க நல்லூரில் சொகுசு வீடு என பல விஷயங்களில் சிக்கி இருக்கிறார் ஈஸ்வரி.

60 சவரன் இல்லை

60 சவரன் இல்லை

ஒரு லட்சம் கொள்ளை அடிச்சியா என வக்கீல் வண்டு முருகன் கேட்க இல்லை 2 லட்சம் என சொல்லும் வடிவேலு காமெடி தான் நினைவுக்கு வருகிறது. இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 60 சவரன் நகை தனது வீட்டில் கொள்ளை போயுள்ளதாக புகார் அளித்த நிலையில், போலீஸார் விசாரணையில் ஈஸ்வரி 100 சவரனுக்கும் மேல் கொள்ளையடித்து இருப்பது அம்பலமாகி உள்ளது.

ரஜினிகாந்த் வீட்டிலும் திருடினாரா

ரஜினிகாந்த் வீட்டிலும் திருடினாரா

இதுதொடர்பாக ஒன் இந்தியாவுக்கு பேட்டி அளித்துள்ள பிரபல கிரைம் பத்திரிகையாளர் செல்வராஜ் 100 சவரன் நகைக்கும் மேல் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் மட்டுமின்றி ரஜினிகாந்த் வீட்டிலும் கைவரிசையை காட்டினாரா ஈஸ்வரி என்கிற கேள்வி எழுகிறது. அது தொடர்பான விசாரணையையும் போலீஸார் நடத்தி வருவதாக கூறுகிறார்.

ஐஸ்வர்யாவுக்கு ஐடியா இல்லை

ஐஸ்வர்யாவுக்கு ஐடியா இல்லை

கடந்த சில ஆண்டுகளாகவே குடும்பத்தில் பிரச்சனை நிலவி வந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கே வீட்டில் எத்தனை சவரன் நகை இருந்தது என்பதே சரியாக தெரியவில்லை என்றும் நகைகளுக்கான சரியான ரசிது உள்ளிட்ட விவரங்கள் அவரிடம் இல்லை. அதனால் தான் போலீஸார் சவுந்தர்யா ரஜினிகாந்த் திருமண ஆல்பங்களை எடுத்துச் சென்று அதில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்ன என்ன நகைகளை போட்டிருக்கிறார் என ஆராய்ச்சி செய்து வருகின்றனர் எனக் கூறி உள்ளார்.

ஐஸ்வர்யாவின் பினாமியா

ஐஸ்வர்யாவின் பினாமியா

ஈஸ்வரி தான் தப்பிப்பதற்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பினாமி என்பதை பயன்படுத்தி இருக்கிறாரா? அல்லது உண்மையிலேயே அவர் ஐஸ்வர்யாவின் பினாமியா என்றும் போலீஸார் விசாரணை நடத்த உள்ளனர் என்றும் செல்வராஜ் கூறியுள்ளார்.

வீட்டிலேயே தங்காமல்

வீட்டிலேயே தங்காமல்

கணவர் தனுஷ் உடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பல நாட்கள் வீட்டிலேயே தங்காமல் பாம்க்ரூவ் ஹோட்டலில் தனியாக தங்கி வந்தார் என்றும் வீட்டில் ஆளில்லாதது மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனைகளை சாதகமாக கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடித்த நிலையில், பல நாள் திருடி ஒரு நாள் மாட்டுவாள் என்பது போல சிக்கியிருக்கிறார் ஈஸ்வரி என்றும் அவருடன் சேர்ந்து டிரைவர் உள்ளிட்ட மூவர் இந்த வழக்கில் சிக்கி உள்ளனர் என்றும் கூறி உள்ளார்.

பொறுப்பு இல்லாமல்

இத்தனை சவரன் நகைகளை லாக்கரில் சரியாக வைத்து அதன் சாவியை யாருக்கும் தெரியாமல் வைப்பது மற்றும் சிசிடிவிக்களை வைத்து கண்காணிக்காமல் விட்டது. எவ்வளவு நகைகளை ஈஸ்வரி தன்னிடம் இருந்து திருடினார். எதெல்லாம் தனது நகை என்கிற எந்த ஒரு தகவலையும் சரியாக போலீஸாருக்கு சொல்லாமல் இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் படங்களை இயக்கி வரும் இயக்குநர் இப்படி பொறுப்பு இல்லாமல் எப்படி இருந்தார் என்பதே பெரிய கேள்வியாக போலீஸாருக்கு எழுந்திருப்பதாக செல்வராஜ் கூறியுள்ள முழு பேட்டியை இந்த லிங்கில் பாருங்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X