நாளை விவாகரத்து தீர்ப்பு.. விவரிக்க முடியாத உறவு.. வழிகாட்டி அவர்.. உருகிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

சென்னை: தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்ட ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இப்போது அவரை பிரிந்திருக்கிறார். இரண்டு பேரும் தாக்கல் செய்த விவாகரத்து மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது இருவருமே ஆஜராகினர். அப்போது தங்களுக்கு விவாகரத்து வேண்டும் என்று அவர்கள் கூறியதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் தீர்ப்பானது நாளை வரவிருக்கும் சூழலில்; எம்.பி.கனிமொழி குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருக்கமாக பேசியிருக்கிறார்.

நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஐஸ்வர்யா. இருவரும் தங்களது வாழ்க்கையை சுமூகமாக ஓட்டிக்கொண்டிருந்தனர். அவர்களின் காதலுக்கு அடையாளமாக யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். மேலும் ஐஸ்வர்யா இயக்கிய முதல் படமான 3 படத்தில் தனுஷ்தான் ஹீரோவாக நடித்திருந்தார். அதெபோல் வை ராஜா வை படத்தில் கெஸ்ட் ரோல் ஏற்றிருந்தார். அதேபோல் தனுஷின் வளர்ச்சிக்கு ஐஸ்வர்யாவும் உதவத்தான் செய்திருக்கிறார்.

aishwarya rajinikanth dhanush kanimozhi

விவாகரத்து: ஆனால் திடீரென நாங்கள் பிரிவதாக சில வருடங்களுக்கு முன்பு இருவரும் அறிவித்தனர். மேலும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனுவையும் தாக்கல் செய்தார்கள். இருந்தாலும் அவர்களை மீண்டும் எப்படியாவது சேர்த்து வைத்துவிட வேண்டுமென்பதில் இரு குடும்பத்தினரும் எவ்வளவோ முயன்றதாகவும்; அது கடைசிவரை பலனளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க சமீபத்தில் நடந்த வழக்கு விசாரணையில் இருவருமே ஆஜராகினார்கள்.

நாளை தீர்ப்பு: அப்போது தங்களுக்கு விவாகரத்து வேண்டுமென்பதில் இருவருமே உறுதியாக இருக்கிறோம் என அவர்கள் நீதிபதியிடம் கூறியதாக தகவல்கள் கசிகின்றன. இதனால் ரஜினி கொஞ்சம் அப்செட் என்றே விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள். அதுமட்டுமின்றி இவ்வளவு முயன்றும் சேர்த்து வைக்க முடியவில்லையே என அவர் நெருக்கமானவர்களிடம் புலம்புவதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் தீர்ப்பானது நாளை வரவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க கனிமொழி எம்.பி. குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார்.

ஐஸ்வர்யா பேச்சு: அதாவது தனியார் ஊடகம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கனிமொழியும், ஐஸ்வர்யாவும் கலந்துகொண்டார்கள். அப்போது பேசிய ஐஸ்வர்யா, "எனக்கும் கனிமொழிக்கும் இருக்கும் நட்பு என்பது 20 வருட நட்பு. எங்களுக்கிடையே இருக்கும் உறவு மிகவும் அழகானது. எங்கு தொடங்கினோம், எப்படி பழகினோம் என்பதை விவரிக்க முடியாத உறவு அது. நான் எப்போதெல்லாம் சோகமாக உணர்கிறேனோ அப்போதெல்லாம் கனிமொழிக்குத்தான் ஃபோன் செய்து பேசுவேன்.

வழிகாட்டி அவர்: நாங்கள் இரண்டு பேரும் குடும்ப உறுப்பினர்கள் போன்றுதான் பேசிக்கொள்வோம். யாருக்காகவும் நான் எங்கும் செல்லமாட்டேன். ஆனால் கனிமொழிக்காக கிளம்பி எங்கு வேண்டுமானாலும் செல்வேன். எங்கள் இருவருக்கிடையே இருக்கும் நட்பு குறித்து நாங்கள் எங்குமே சொன்னதில்லை. சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் எனது கோயில் வழிகாட்டி அவர்தான். நான் எந்த ஊருக்கு சென்றாலும் கனிமொழி அனுப்பும் ஆட்கள்தான் அழைத்து செல்வார்கள்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X