சில நேரங்களில்..தேவையானது அணைப்பு மட்டுமே..மகன்களுடன் ஐஸ்வர்யா!
சென்னை : மகன்களுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கட்டியணைந்தபடி இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அனைவர் கண்படும் அளவிற்கு மனம்ஒத்த தம்பதிகளாக இருந்த இவர்கள் ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்துவிட்டு பிரிந்தனர். இது ரசிகர்களை மட்டுமல்லாது திரைப்பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இருவரும் பிரிந்தனர்
விவாகரத்து அறிவிக்குப்பின் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருமே சினிமாவில் படு பிஸியானார்கள். இருவரும் விவாகரத்து செய்து கொள்ளவில்லை பிரிந்து தான் இருக்கிறார்கள். விரைவில் சேர்ந்து விடுவார்கள் என்று தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா கூறினார். இருவரும் குழந்தைகளுக்காக அல்லது அப்பா ரஜினிகாந்திற்காக சேர்த்து விடுவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தார்.

சந்தித்துக்கொள்ளவில்லை.
பிரிவு அறிவிப்புக்கு பின் ஐஸ்வர்யா பயணி என்ற ஆல்பம் பாடலை இயக்கி வெளியிட்டார். இந்த ஆல்பம் பாடலின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற போது, தனுஷ் மாறன் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் தங்கியிருந்தார். இருவரும் ஒரே ஓட்டலில் தங்கியபோதும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளவில்லை.

விரைவில் குட் நியூஸ்
இதையடுத்து, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவும் ஒருவரை ஒருவர் ரகசியமாக சந்தித்துகொள்வதாக கிசுகிசுக்கப்பட்டது. இதையடுத்து, தனுஷின் பிறந்த நாளன்று இருவரும் இணைந்து பிறந்தநாளை கொண்டாட உள்ளதாகவும், குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்று இருவரும் சேர்ந்துவிட்டோம் என்று அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.'

தி கிரேமேன் நிகழ்ச்சியில்
இதையடுத்து, தனுஷ் நடித்த தி கிரேமேன் ப்ரீமியர் நிகழ்ச்சிக்காக தனது இரு மகன்களையும் தனுஷ் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றார். அதில் யாத்ரா, லிங்கா,தனுஷ் மூன்று பேரும் ஒன்று போல கோட் ஷூட் அணிந்திருந்தனர். இந்த புகைப்படம் வைரலானது. மேலும், தனுஷின் மூத்த மகன் லிங்கா சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார் என்ற பேச்சும் அதிகரித்து வருகிறது.

மகன்களுடன் செல்பி
இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூகவலைத்தள பக்கத்தில் யாத்ரா, லிங்காவை கட்டி அணைத்தபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, சில நேரங்களில்..உங்களுக்கு தேவையானது அவர்களின் அணைப்பு மட்டுமே என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











