மை கிரேஸி டியர்... செல்வராகவனை கட்டிப் பிடித்து வாழ்த்திய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...

சென்னை: காதல் கொண்டேன் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான செல்வராகவன், தற்போது பிஸியான நடிகராகவும் வலம் வருகிறார்.

சமீபத்தில் செல்வராகவன் நடித்த பகாசுரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், செல்வராகவன் தனது 46வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.

அவருக்கு இயக்குநரும் தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்துக் கூறியது ட்ரெண்டாகி வருகிறது.

ரசிகர்களின் இயக்குநர் செல்வராகவன்

ரசிகர்களின் இயக்குநர் செல்வராகவன்

தனுஷின் காதல் கொண்டேன் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். அண்ணன், தம்பிகளான செல்வராகவனும் தனுஷும் ஆரம்பத்தில் ஒன்றாக திரையுலகில் பயணிக்கத் தொடங்கினர். இவர்கள் கூட்டணியில் வெளியான புதுப்பேட்டை தமிழ் சினிமாவில் புதிய அதிர்வுகளை ஏற்படுத்தியது. தனுஷ் இன்று சிறந்த நடிகராக வலம் வருவதற்கு செல்வராகவனும் முக்கியமான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறந்தநாள் கொண்டாட்டம்

பிறந்தநாள் கொண்டாட்டம்

செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், என்.ஜி.கே போன்ற படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதேபோல், நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் கடந்தாண்டு வெளியான நானே வருவேன், பலரது கவனத்தையும் ஈர்த்தது. இன்னொருபக்கம் விஜய்யின் பீஸ்ட், கீர்த்தி சுரேஷுடன் சாணிக்காயிதம், சமீபத்தி வெளியான பகாசுரன் படங்களில் நடிகராகவும் கலக்கி வருகிறார் செல்வா. இந்நிலையில், நேற்று அவர் தனது 46வது பிறந்தநாளை கொண்டாடினார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வாழ்த்து

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வாழ்த்து

கடந்த சில நாட்களாகவே அடிக்கடி வாழ்க்கைத் தத்துவங்களை தனது டிவிட்டரில் ஷேர் செய்து வருகிறார் செல்வா. இந்நிலையில், நேற்று பிறந்தநாள் கொண்டாடிய செல்வராகவனுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர். அவர்களில் ரொம்பவே முக்கியமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தற்போது அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருமே தாங்கள் பிரிவதாக அறிவித்திருந்தனர்.

மை கிரேஸி டியர்

மை கிரேஸி டியர்

தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருமே தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில் தான், செல்வராகவனுக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து கிடைத்துள்ளது. செல்வராகவனை கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ள ஐஸ்வர்யா, ஹேப்பி பர்த்டே மை கிரேஸி டியர், எப்போதும் அதீத அன்புடன் என கேப்ஷன் கொடுத்துள்ளார். இருவருமே செம்ம ஃபன்னாக கத்திக்கொண்டு இருப்பதாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் போட்டோவும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வாழ்த்தும் ட்ரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X