என்ன ஐஸ்வர்யா இதெல்லாம்..தனுஷ் வேண்டாமா?.. கேள்வி கேட்கும் ரசிகர்கள் !

சென்னை : ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை பார்த்து ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

தனுஷ், ஐஸ்வர்யா

தனுஷ், ஐஸ்வர்யா

நட்சத்திர தம்பதிகளான தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் அனைவரின் கண்படும் அளவுக்கு மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தனர். ஐஸ்வர்யா தனது கணவர் தனுஷை வைத்து 3 திரைப்படத்தை இயக்கியும் இருந்தார். இந்த படத்தை இருவரும் ஒன்றாக இணைந்து இயக்கினார்கள் என்பது சினிமா வட்டாரத்தில் இருப்பவர்களுக்கு நிச்சயம் தெரிந்து இருக்கும்.

பிரிந்தனர்

பிரிந்தனர்

கிட்டத்தட்ட 18 ஆண்டு காலம் தம்பதிகளாக வாழ்ந்து வந்த இந்த ஜோடி கடந்த ஜனவரி மாதம் இன்ஸ்டாகிராமில் பிரிவதாக அறிவித்துவிட்டுப் பிரிந்தனர் ரஜினிகாந்த் இருவரையும் சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுவதாகவும், அது சார்ந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவும் இருவரும் பிரிந்துதான் இருக்கிறார்கள் விவாகரத்து செய்யவில்லை என்று கூறியிருந்தார்.

பெயரை மாற்றிய ஐஸ்வர்யா

பெயரை மாற்றிய ஐஸ்வர்யா

இதை மெய்ப்பிப்பது போல ஐஸ்வரியாவும் மாறன் திரைப்படம் வெளியானதற்கு இன்ஸ்டாகிராமில் லைக் போட்டு இருந்தார். அதே போல தனுஷூம் ஐஸ்வர்யாவின் ஆல்பம் வெளியானதற்கு வாழ்த்துக்கள் தோழி என பதிவிட்டு வாழ்த்து கூறியிருந்தார். இதனால் இருவரும் இணைந்து விடுவார்கள் என ரசிகர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில், ஐஸ்வர்யா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஐஸ்வர்யா தனுஷ் பெயரை நீக்கிவிட்டு ப்ரொஃபைலில் ஐஸ்வர்யா ரஜினி என்று மாற்றிவிட்டார்.

தனுஷ் வேண்டாமா?

தனுஷ் வேண்டாமா?

இந்நிலையில், ஐஸ்வர்யா தனது இஸ்டாகிராம் ஸ்டோரியில், செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலியுடன் இருக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார். அதே போல செல்வராகவனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். தனுஷின் பெயரை நீக்கிவிட்டு, செல்வராகவனின் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்து வருகிறார் ஐஸ்வர்யா, இதைப்பார்த்த நெட்டிசன்ஸ் என்ன ஐஸ்வர்யா இதெல்லாம், தனுஷ் மட்டும் வேண்டாம், அவரது குடும்பம் மட்டும் வேண்டுமா என்று கேள்வி கேட்டும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X