தனுஷின் முன்னாள் மனைவியை ஃபாலோ செய்யும் ஹிப்ஹாப் ஆதி.. மகிழ்ச்சியில் ரஜினி.. எல்லாம் நல்ல விஷயம்தான்

சென்னை: நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த ஆண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள். ஆனாலும் அவர்கள் குறித்த செய்திகள் அல்லது தகவல்கள், இவர்களின் குழந்தைகள் குறித்த தகவல்கள் என தொடர்ந்து வந்துகொண்டே தான் உள்ளது. இந்நிலையில் தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் நாளை மறுநாள் அதாவது பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனுஷின் முன்னாள் மனைவி இயக்கி வெளியான லால் சலாம் படம் குறித்த தகவல் திரைத்துறையில் உலா வருகிறது. இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம், லால் சலாம். விக்ராந்த், விஷ்ணு விஷால் கதாநாயகர்களாக நடித்தனர். இது மட்டும் இல்லாமல் படத்தில் ரஜினிகாந்த் எக்ஸ்டெண்டெட் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்தார். ஏ. ஆர். ரகுமான் படத்திற்கு இசையமைத்தார். லைகா நிறுவனம் தயாரித்த இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் மத நல்லிணக்க கருத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.

Aishwarya Rajinikanth Lal Salaam Hip Hop Aadhi

மேலும் படத்தின் திரைக்கதையில் கிரிக்கெட் ஒரு முக்கியமான அங்கம் வகித்ததால், முறைப்படி கிரிக்கெட் கற்றுக் கொண்ட நடிகர்களான விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடித்தனர். செந்தில் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அதேபோல் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்தார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: படத்தில் இடம்பெற்ற தேர் திருவிழா பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இது படத்தின் வசூலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படியான நிலையில் படத்தின் சுமார் 25 நிமிடங்கள் வரவேண்டிய காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் தொலைந்துவிட்டது. எங்களால் மீண்டும் படப்பிடிப்பு நடத்த முடியாது. எனவே நாங்கள், இருக்கின்ற ஃபுட்டேஜை வைத்து படத்தை எடிட் செய்து ரிலீஸ் செய்தோம் என இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்தார்.

மிஸ்ஸிங் சீன்ஸ்: இவர் இப்படிக் கூறியதை பலரும் நம்பவில்லை. படத்தின் தோல்வியை சமாளிக்க சப்பைக் கட்டு கட்டுகிறார் எனக் கூறினார்கள். இன்னும் சொல்லப்போனால், பலரும் இவரை ட்ரோல் செய்தார்கள். சில பேட்டிகளில் கூட, இயக்குநர்களிடம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியதை குறிப்பிட்டு நக்கலாக எல்லாம் கேள்வி கேட்டுள்ளார்கள். இப்படியான நிலையில், தற்போது தொலைந்து போனதாக கூறப்படும், ஹார்ட் டிஸ்க் கிடைத்து விட்டதாம். எனவே அவற்றில் உள்ள 25 நிமிட காட்சிகளை ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளார். இதுமட்டும் இல்லாமல், இந்த காட்சிகளுக்கு சென்சார் சர்டிபிகேட் எல்லாம் வாங்கி விட்டாராம். எனவே விரைவில் இந்த ரிலீஸ் தொடர்பான அறிவிப்புகள் வெளியாக உள்ளது என கூறப்படுகிறது. இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளதாம்.

ஹிப் ஹாப் ஆதி: அதேபோல், ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான படம், பி.டி. சார். இந்தப் படத்தின் ஃபுட்டேஜ் அடங்கிய ஹார்ட் டிஸ்க்கும் காணாமல் போயுள்ளது. இதனால் படக்குழுவினர், இருக்கும் காட்சிகளை எடிட் செய்து படத்தை ரிலீஸ் செய்துள்ளனர். தற்போது காணாமல் போன ஃபுட்டேஜ் அடங்கிய ஹார்ட் டிஸ்க் கிடைத்து விட்டதாம். எனவே லால் சலாம் படத்தின் மிஸ்ஸிங் சீன்ஸ்க்கு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கிறது என்பதைப் பார்த்து தங்களது படத்தின் காட்சியையும் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய பிடி.சார் படக்குழு முடிவு செய்துள்ளதாம். இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X