லால் சலாம் போனால் என்ன சூப்பர் படம் இயக்குறேன் பாருங்க.. ஐஸ்வர்யா விரித்த வலை.. சிக்குவாரா சித்தா?
சென்னை: நடிகர் தனுஷை விவாகரத்து செய்து பிரிந்து விட்டு மீண்டும் தனக்கு பிடித்த இயக்குநர் தொழிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஈடுபட்டு வருகிறார். 3 மற்றும் வை ராஜா வை படங்கள் சொதப்பினாலும் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்க விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் லால் சலாம் படம் உருவாகப் போகிறது என்கிற அறிவிப்பு வெளியானதிலிருந்து அந்த படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பை கொண்டு இருந்தனர்.
ஆனால், கடந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த படம் காலதாமதமாகி இந்த ஆண்டு பொங்கலுக்கும் வராமல் பிப்ரவரி ஒன்பதாம் தேதி தியேட்டர்களில் வெளியானது. ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

மத நல்லிணக்கம்: அப்பா ரஜினிகாந்த்தை சங்கி என சோசியல் மீடியாவில் பலரும் ட்ரோல் செய்வது தனக்கு பிடிக்கவில்லை என வெளிப்படையாக லால் சலாம் ஆடியோ லான்ச்சில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியிருந்தார். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மத நல்லிணக்கத்தை விரும்புபவர். அவர் சங்கியாக இருந்திருந்தால் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் எனும் இஸ்லாமிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க மாட்டார் எனக் கூறினார்.
படம் ஓடவில்லை: கிரிக்கெட் மற்றும் மத அரசியலை மையப்படுத்தி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படம் தேசிய விருது வெல்லும் கதை என்றெல்லாம் ரஜினிகாந்த் கூறியிருந்தார். ஆனால் அந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய தோல்வி படமாக மாறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 20 கோடி கூட அந்த படம் வசூல் செய்யவில்லை. ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூல் 98 கோடி மற்றும் அந்த படத்தின் வாழ்நாள் வசூல் 600 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றியடையாமல் விடமாட்டேன்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இதுவரை இயக்கிய படங்களிலேயே அவர் தனுசை வைத்து இயக்கிய முதல் படமான 3 படம்தான் கொஞ்சம் பார்க்கும்படி இருக்கும். அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆனதற்கு காரணம் அனிருத் பாடல்கள் தான். ஆனால் அந்த படத்தை ஓவர் ஷாடோ செய்தது அனிருத்தின் இசை மற்றும் பாடல்தான் என சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. லால் சலாம் திரைப்படம் தோல்வியை தழுவினாலும் அடுத்த படத்தில் வெற்றியடையாமல் விடமாட்டேன் என்கிற முடிவில் தற்போது ஹீரோ தேடுதல் வேட்டையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சித்தார்த் தான் ஹீரோவா?: சமீபத்தில், தனது புதிய கதையுடன் நடிகர் சித்தார்த்தை சந்தித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கதை சொன்னார் என்றும் கதை பிடித்துப் போய் விட்டதாகவும் பவுண்டட் ஸ்க்ரிப்ட் கொடுங்க என பண்ணலாம் என சித்தார்த் சொல்லியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு சித்தார்த் தயாரித்து நடித்த சித்தா படம் அவருக்கு பல ஆண்டுகள் கழித்து ஹிட் கொடுத்தது. இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் அடுத்த பட ஹீரோ சித்தார்த் தானா என ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











