கடவுள் வழிகாட்டுகிறார்... எதை சொல்கிறார் ரஜினி மகள் ஐஸ்வர்யா

சென்னை : கடவுள் தனக்கு வழிகாட்டுவதாக ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா சோஷியல் மீடியாவில் கருத்து பதிவிட்டுள்ளார். இதற்காக ரசிகர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

கடவுள் வழிகாட்டுகிறார்... எதை சொல்கிறார் ரஜினி மகள் ஐஸ்வர்யா - வீடியோ

ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமான ஐஸ்வர்யா, வை ராஜா வை படத்தையும் டைரக்டர் செய்துள்ளார். டாக்குமென்ட்ரி உள்ளிட்டவைகளையும் டைரக்ட் செய்துள்ளார்.

விசில், ஆயிரத்தில் ஒருவன் படங்களில் பின்னணி பாடி உள்ள ஐஸ்வர்யா, சில படங்களில் டப்பிங்கும் பேசி உள்ளார். பல திறமைகளைக் கொண்ட ஐஸ்வர்யா, அப்பா ரஜினியை வைத்து படம் ஒன்றை இயக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்தார்.

தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா

தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா

இந்நிலையில் ஜனவரி 17 ம் தேதி தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தங்களின் 18 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடித்து கொள்வதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து இவர்களின் பிரிவிற்கு என்ன காரணம் பல விதமாக செய்திகள் அடுக்கடுக்காக வெளிவந்து பரபரப்பை கிளப்பின. ஆனால் இவர்கள் விவாகரத்து செய்யவில்லை, சாதாரண குடும்ப பிரச்சனை தான் என்றும் கூறப்பட்டது.

ஐஸ்வர்யா பகிர்ந்த சந்தோஷ விஷயம்

ஐஸ்வர்யா பகிர்ந்த சந்தோஷ விஷயம்

தனுஷை பிரிவதாக அறிவித்த பிறகு இன்ஸ்டாகிராமில் எந்த போஸ்டையும் பதிவிடாத ஐஸ்வர்யா, சமீபத்தில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக போட்டோ பதிவிட்டார். இப்படி தொடர்ந்து கவலையான விஷயங்களை பதிவிட்டு வந்த ஐஸ்வர்யா தற்போது சந்தோஷமான விஷயம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

காதலர் தின வீடியோ

காதலர் தின வீடியோ

ஐதராபாத்தில் மீண்டும் பணிகளுக்கு திரும்பிய ஐஸ்வர்யா, காதலர் தினத்தை முன்னிட்டு மியூசிக் வீடியோ ஒன்றை இயக்கி வந்தார். முசாபிர் என பெயரிடப்பட்டுள்ள இந்த மியூசிக் வீடியோவின் ப்ரோமோவை நேற்று இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார் ஐஸ்வர்யா. இந்த ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

கடவுள் வழி காட்டுகிறார்

கடவுள் வழி காட்டுகிறார்

அன்கித் திவாரி இசையமைத்துள்ள முசாபிர் பாடல் மூன்று மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை தெலுங்கில் சாகரும், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்தும், தமிழில் அனிருத்தும் பாடுகின்றனர். இந்த பாடலின் முழு வீடியோ விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவுடன், நான் என்ன சொல்கிறேன் என்றால்...கடவுள் எனக்கு வழிகாட்டுகிறார் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X