வாழ்க்கையும் இல்லை.. அன்பு இல்லை… ஐஸ்வர்யா வெளியிட்ட இன்ஸ்டா பதிவு !

சென்னை : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்க்கையும் இல்லை, அன்பு எல்லாம் மாறிக்கொண்டே இருக்கிறது என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் 2004ம் ஆண்டு பிரம்மாண்டமான முறையில் நடந்தது.

இந்த தம்பதிகளுக்கு யாத்ரா, லிங்கா என்ற இருமகன்கள் உள்ளனர்.

பிரிந்தனர்

பிரிந்தனர்

கடந்த ஜனவரி மாதம் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்து இருப்பதாக கூறி அறிக்கையை வெளியிட்டு இருந்தனர். இவர்களின் இந்த திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் மட்டுமல்லாது திரைப்பிரபலங்களும் அதிர்ச்சி அடைந்தனர்.18 ஆண்டு காலம் ஒன்றாக வாழ்ந்துவிட்டு, திடீரென பிரிவு என்று அறிவித்து இருப்பது குழந்தைகளை பாதிக்கும் என்று பலரும் அவர்களுக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.

சேர்ந்து விடுவார்கள

சேர்ந்து விடுவார்கள

தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜாவும் அவர்கள் விவாகரத்து செய்யவில்லை ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ள பிரிந்து இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார். அதேபோல ஐஸ்வர்யாவும் இதுவரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா ஆர் தனுஷ் என்றே வைத்துள்ளார். இதனால் இவர்கள் இருவரும் விரைவில் சேர்ந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டா பதிவு

இன்ஸ்டா பதிவு

இந்நிலையில், ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்தித்தாளை படிப்பதைப்போல ஒரு வீடியோவை பதிவிட்டு அதில் சில கேப்ஷன்களை போட்டுள்ளார். அதில், நீங்கள் காபியுடன் காலையில் செய்தித்தாளை கடைசியாக எப்போது படித்தீர்கள்? கடந்த இரண்டு வருடங்களாக நம் வாழ்க்கையை மிகவும் மாற்றியமைத்துள்ளது. அது போல சிடி பிளேயர்கள், டேப் ரெக்கார்டர்கள், ஃபேட் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களை பயன்படுத்தும் முன் அவை சத்தம் போடும் அவை இப்போது கேட்பதில்லை.

வாழ்க்கையும் இல்லை

வாழ்க்கையும் இல்லை

கேமராக்கள், டிவிடி ப்ளேயர்கள் எல்லாம் அழிந்து போய்விட்டன (என் மகனிடம் டிவிடி ப்ளேயர் பற்றி கேட்டால் அப்படியா தெரியாது என்கிறான்) காலம் அனைத்தையும் வேகமாக மாற்றி வருகிறது. வாழ்க்கை அவசர அவசரமாக இருப்பது போல தெரிகிறது. வாழ்க்கையை ரசித்து, அனுபவித்து வாழுங்கள். அனுபவங்கள் என் வாழ்க்கையை மாற்றிவிட்டன. வாழ்க்கையும் இல்லை, அன்பு மற்றும் மகிழ்ச்சி எல்லாம் ஒவ்வொரு நிமிடமும் மாறிக்கொண்டே இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அனைத்தும் மாறும் கவலை வேண்டாம் என அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X