என் அப்பா ரஜினிகாந்த் சங்கி கிடையாது.. ஆவேசமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. கலங்கிய சூப்பர் ஸ்டார்!

சென்னை: லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் மேடையேறி பேசிய அந்த படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது அப்பா ரஜினிகாந்தை சங்கி என சொல்லாதீங்க ரொம்பவே கஷ்டமா இருக்கு என பேசியது பெரும் பரபரப்பை சமூக வலைதளங்களில் உருவாக்கி உள்ளது. சமீபத்தில் அயோத்தியில் புதிதாக திறக்கப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்ட நிலையில், கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசும் போது அதை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

3 மற்றும் வை ராஜா வை என இரு படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பல ஆண்டுகள் கழித்து புதிதாக இயக்கியுள்ள படம் தான் லால் சலாம். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த படத்திற்காக கடுமையாக உழைத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்த மாதம் படம் வெளியாக உள்ள நிலையில், உற்சாகத்தில் உள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால், கே.எஸ். ரவிகுமார் உள்ளிட்ட பலர் மேடை ஏறி பேசிய நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசும் போது எமோஷனலாகி விட்டார்.

Aishwarya Rajinikanth says Super Star Rajinikanth is not a Sanghi at Lal Salaam Audio Launch

சங்கின்னு சொல்லாதீங்க: சமூக வலைதளத்தில் இருந்து எப்போதுமே விலகியே இருக்கிறேன். ஆனாலும், என்னுடைய டீம் அடிக்கடி ஒரு விஷயத்தை காட்டிக் கொண்டே இருந்தனர். அதிலும் குறிப்பாக சங்கி என முத்திரை குத்தப்படும் அந்த வார்த்தை எனது மனதை ரொம்பவே உறுத்துகிறது. உங்களுக்கு எல்லாம் தெளிவா புரியும்படி ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சங்கி இல்லை. எங்கப்பா சங்கியா இருந்திருந்தா லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்திருக்கவே மாட்டார். மதங்களை கடந்து மனிதர்களை மட்டுமே நேசக்கூடிய மனிதர் அவர் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருக்கமாக பேசியுள்ளார்.

ராமர் கோயில் விழா: அயோத்தியில் சமீபத்தில் ராமர் கோயில் திறக்கப்பட்ட நிலையில், நடிகர் ரஜினிகாந்த் முதலில் ராமரை தரிசித்த 150 பேரில் நானும் ஒருவன் என நினைக்கும் போது சந்தோஷமாக உள்ளது எனக் கூறியிருந்தார். பாபர் மசூதி பிரச்சனை பெரிதாக வெடித்த நிலையில், அயோத்தியில் கட்டியுள்ள ராமர் கோயிலுக்கு சென்ற ரஜினிகாந்த் மீது கடுமையான விமர்சனங்கள் குவிந்தது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் பல போராட்டங்கள், தியாகங்களுக்கு பிறகு இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது என பேசிய நிலையில், அவரது பேச்சில் தனக்கு விமர்சனம் உண்டு என பா. ரஞ்சித் ப்ளூ ஸ்டார் இசை வெளியீட்டு விழாவில் பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கண் கலங்கிய ரஜினிகாந்த்: மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அப்படி பேசியதை கேட்டதுமே நடிகர் ரஜினிகாந்த் கண்கள் கலங்கிய காட்சிகள் ரசிகர்களை நெகிழ வைத்தன. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசும் போது, கடந்த 2 ஆண்டுகளான என்னோட 2 பசங்களை சரியா கவனித்துக் கொள்ளவில்லை. அவங்க பிடி விழாவுக்கு கூட போகல, ஆனால் அவர்கள் என்னை புரிந்துக் கொண்டு எனக்கு சப்போர்ட் பண்ணாங்க என பாராட்டி பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X